கேப்டன் பதவி வந்த பிறகு ரோகித் சர்மாவை தொடரும் சோதனை! எப்போது முடிவுக்கு வரும்

IND vs BAN: கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்ற பிறகு அவரால் ஒரு போட்டியில் கூட வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட முடியவில்லை

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 12, 2022, 05:45 PM IST
  • டெஸ்ட் கேப்டனாக தொடரும் சோதனை
  • ஒருமுறை கூட விளையாடவில்லை
  • வெளிநாட்டில் மண்ணில் எப்போது விளையாடுவார்?
கேப்டன் பதவி வந்த பிறகு ரோகித் சர்மாவை தொடரும் சோதனை! எப்போது முடிவுக்கு வரும் title=

Rohit Sharma IND vs BAN 1st Test: இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச அணிக்கு எதிராக புதன்கிழமை (டிசம்பர் 14) முதல் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. தொடர் தொடங்குவதற்கு முன்பே, முழு நேர கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக முதல் போட்டியில் இருந்து விலகியுள்ளார். ரோஹித் ஷர்மாவின் அதிர்ஷ்டம் அவருக்கு மீண்டும் ஒருமுறை துரோகம் செய்துவிட்டது. டெஸ்ட் போட்டியின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து அவர் இதுவரை ஒருமுறைகூட வெளிநாட்டு மண்ணில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட முடியவில்லை

ரோஹித்துக்கு தொடரும் சோதனை

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இந்த ஆண்டு தொடக்கத்தில் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். விராட்டின் இந்த முடிவுக்கு பிறகு, ரோஹித் சர்மா, மூன்று வடிவிலான இந்திய அணிக்கும் முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், அந்த பொறுப்பை ஏற்றத்தில் இருந்து ரோஹித் சர்மாவால் ஒருமுறை கூட வெளிநாட்டில் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக இருக்க முடியவில்லை. இந்த ஆண்டு ஒவ்வொரு வெளிநாட்டு டெஸ்ட் தொடருக்கு முன்பும் ஏதோ ஒரு காரணத்தால் டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகவேண்டியிருந்தது.

மேலும் படிக்க | அயர்லாந்து கிரிக்கெட் அணியில் சஞ்சு சாம்சன்? வாய்ப்பு கிடைக்காததால் முடிவு?

கேப்டனாக ரோகித் சர்மா

ரோஹித் சர்மா இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே விளையாடப்பட்டிருக்கிறது. அதில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், கேப்டனாக வெளிநாட்டில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட அவரால் விளையாட முடியவில்லை. இந்த ஆண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியபோது கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித் சர்மா தசைப்பிடிப்பால் அந்த தொடரில் இருந்து விலகினார்.

இங்கிலாந்து டெஸ்ட்டில் இருந்தும் நீக்கம்

ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய அணி சென்றது. இந்த டெஸ்டில் ரோஹித் ஷர்மா இந்திய அணிக்கு தலைமை தாங்கவிருந்தார். ஆனால், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு தலைமை ஏற்றார். இப்போது, வங்கதேச டெஸ்ட் தொடருக்கு முன்பாக அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை அவரின் காயம் குணமடைந்தால், வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்படுவார்.

மேலும் படிக்க | IPL 2023 : மினி ஏலத்தின் விதிகள் முதல் அணிகளின் கையிருப்பு தொகை வரை - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News