ஒரு சதம்...பல சாதனை பலே சூர்யகுமார் யாதவ்; ரோகித் இடத்திலும் சிம்மாசனம் போட்டாச்சு!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் சதமடித்த சூர்யகுமார் யாதவ் பல சாதனைகளை தன்வசப்படுத்தியுள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 20, 2022, 05:31 PM IST
  • 2வது 20 ஓவர் சதமடித்த சூர்யகுமார் யாதவ்
  • நியூசிலாந்து அணிக்கு எதிராக அபாரம்
  • ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்தார்
ஒரு சதம்...பல சாதனை பலே சூர்யகுமார் யாதவ்; ரோகித் இடத்திலும் சிம்மாசனம் போட்டாச்சு! title=

இந்தியா - நியூசிலாந்து மோதல்

ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய இளம் படை நியூசிலாந்து சென்று 20 ஓவர் போட்டியில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2வது போட்டி இன்று நடைபெற்றது. மவுன்கானுய் மவுண்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணியில் ரிஷப் பன்ட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் ஓப்பனிங் இறங்கினர்.

சூர்யகுமார் அதிரடி

இஷான் கிஷன் ஓரளவுக்கு நிலைத்து நின்று விளையாட, ரிஷப் பன்ட் 13 பந்துகளில் 6 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். அவருக்கு பிறகு களம் புகுந்த சூர்யகுமார் யாதவ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். 51 பந்துகளை எதிர்கொண்ட அவர் 111 ரன்கள் விளாசினார். 7 சிக்சர்களும் 11 பவுண்டரிகளும் அடங்கும். அவரின் இந்த சதம் மூலம் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது.

இந்திய அணி வெற்றி

பின்னர் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

சூர்யகுமார் சாதனை

இப்போட்டியில் சதமடித்த சூர்யகுமார் யாதவ், 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 2 முறை சதமடித்த 2வது இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார். ஏற்கனவே, ரோகித் சர்மா 4 முறை சதம் விளாசியுள்ளார். மேலும், ஒரே ஆண்டில் 2 முறை சதம் விளாசிய ரோகித்தின் சாதனையையும் சமன் செய்துள்ளார். அதேபோல் ஒரே ஆண்டில் இந்திய அணிக்காக அதிக முறை மேன் ஆப்தி மேட்ச் விருதுகளை பெற்ற இந்திய வீரர் என்ற சாதனையும் சூர்யகுமார் வசம் வந்துள்ளது. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News