இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்ற நிலையில் இவ்விரு அணிகளும் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெறுகிறது. டாஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீஸ் ஸ்மித், பந்துவீச்சை தேர்வு செய்ய இந்திய அணி பேட்டிங் இறங்கியது. ஓப்பனிங் இறங்கிய ருதுராஜ் கெய்க் வாட் அவுட்டானாலும், அடுத்து வந்த வீரர்கள் அதிரடியாக ஆடினர்.
சுப்மான் கில் - ஸ்ரேயாஸ் சதம்
ஓப்பனிங் இறங்கிய சுப்மான் கில் ஸ்ரேயாஸ் அய்யருடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் போட்டி போட்டுக் கொண்டு ரன்ரேட்டை 6 ரன்களுக்கு குறையாமல் தொடக்கத்தில் இருந்தே எடுத்துச் சென்றனர். சுப்மன் கில் பார்மில் இருப்பதால் அவர் எத்தனை ரன்கள் அடிப்பார் என்பது மட்டும் தான் கேள்வியாக இருந்தது. ஆனால் மறுமுனையில் இறங்கிய ஸ்ரேயாஸ் இப்போது தான் காயத்தில் இருந்து மீண்டு 2வது போட்டியில் ஆடிக் கொண்டிருப்பதால் அவருடைய ஆட்டத்தின் மீது அனைவரது பார்வையும் இருந்தது. ஆனால், எந்தவித சலனமும் இல்லாமல் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை எதிர்கொண்ட அவர் அவ்வப்போது கிடைக்கும் லட்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிக் கொண்டே இருந்தனர். இதனால் இருவரும் சதமடித்து அவுட்டானார்கள்.
கே.எல்.ராகுல் அதிரடி
#INDvsAUS #INDvAUS #IndiaVsAustralia pic.twitter.com/EJJ7qyyKgZ
— @Yours_Viru) September 24, 2023
ஸ்ரேயாஸ் மற்றும் சுப்மன் கில் சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்துவிட்டதால் அவர்களுக்குப் பிறகு வந்த கேப்டன் கே.எல்.ராகுலும் அதிரடியாக ஆடினார். 38 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட ராகுல் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் விளாசி 52 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானார். அவருக்குப் பிறகு வந்த இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவும் எந்த இடத்திலும் அதிரடியை கைவிடவில்லை. குறிப்பாக சூர்யகுமார் யாதவ் பேட்டில் பட்ட பந்துகளை எல்லாம் வாண வேடிக்கை காண்பித்தார்.
சூர்யகுமார் யாதவ் வாண வேடிக்கை
— Johns. (@CricCrazyJohns) September 24, 2023
அதிரடியாக ஆடிய சூர்ய குமார் யாதவ் 37 பந்துகளில் 72 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் ஆடினார். அவர் மொத்தம் 6 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் விளாசினார். அதில் ஒரே ஓவரில் மட்டும் 4 சிக்சர்களை தொடர்ச்சியாக அடித்து அமர்களப்படுத்தினார். 43வது ஓவரை ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரரான கேம்ரூன் கிரீன் வீச வந்தார். அவரை வீசிய முதல் பந்தையே சிக்சருக்கு அடித்த அவர், அதன்பிறகு எதிர்கொண்ட மற்ற 3 பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்டார். 6, 6, 6, 6 என லெக்சைட், ஆப்சைடு என அவர் சுழன்று அடித்த ஷாட்டுகளால் கேம்ரூன் கிரீன் பதறிப்போனார். இதனால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 399 ரன்கள் குவித்தது. இன்னும் ஒரு ரன் அடித்திருந்தால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் 400 ரன்கள் விளாசிய சாதனையை செய்திருக்கலாம். அது மட்டும் ஜஸ்ட் மிஸ்ஸானது.
மேலும் படிக்க | IND vs AUS: உலக கோப்பையை இப்பவே இந்தியாவுக்கு கொடுத்துடலாம் - ஏன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR