Suryakumar Yadav's Support for Rohit Sharma: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டது, ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை கிளப்பிய நிலையில் இப்போது அணிக்குள்ளேயும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. சூர்யகுமார் யாதவ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இதயம் நொறுக்கிபோன சிமிலியை பதிவிட்டு அதிருப்தியையும், சோகத்தையும் வெளிக்காட்டியுள்ளார்.
ரோகித் சர்மா நீக்கம்
ஐபிஎல் 2024 தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியை ஹர்திக் பாண்டியா கேப்டனாக வழிநடத்த இருக்கிறார். இதற்கான அறிவிப்பை மும்பை இந்தியன்ஸ் அணி வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதுவரை அணியை வெற்றிகரமாக வழிநடத்திய ரோகித் சர்மாவுக்கு வாழ்த்து சொல்லியிருப்பதுடன், களத்திலும், வெளியேயும் மும்பை இந்தியன்ஸூக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இதனை ரோகித் சர்மா மற்றும் அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் ரோகித் சர்மா வரும் ஐபிஎல் தொடரிலும் மும்பையை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. பாண்டியா துணை கேப்டனாக இருப்பார் என்றும் தகவல் வெளியானது.
மேலும் படிக்க | கேப்டன் பதவியில் இருந்து திடீரென நீக்கிய மும்பை இந்தியன்ஸ் - ரோகித் சர்மா ரியாக்ஷன்
மும்பை இந்தியன்ஸ் அதிரடி முடிவு
ஆனால், அடுத்த சில ஆண்டுகளைக் கருத்தில் கொண்டு மும்பை இந்தியன்ஸ் அணியை கட்டமைக்கும் பொருட்டு இத்தகைய கடினமான முடிவை மும்பை இந்தியன்ஸ் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியா அணிக்குள் வரும்போதே இப்படியான சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்தனர். இருப்பினும் ரோகித் சர்மா தானாக முன்வந்து ஹர்திக் பாண்டியாவிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பிலும் இது குறித்து ரோகித் சர்மாவிடம் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் கேப்டன் பொறுப்பை விட்டுக் கொடுப்பதில் அவருக்கு உடன்பாடு இல்லையாம்.
சூர்யகுமார் யாதவ் ரியாக்ஷன்
குறிப்பிட்ட காலக்கெடுவும் ரோகித் சர்மாவுக்கு மும்பை இந்தியன்ஸ் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு ரோகித் தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் செல்லாததால் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகமே புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை அறிவித்திருக்கிறது.
(@surya_14kumar) December 16, 2023
இது தனிப்பட்ட முறையில் ரோகித் சர்மாவுக்கு கடும் அதிருப்தியை கொடுத்திருக்கிறது. இருப்பினும் அவர் வெளிப்படையாக எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக அவருடைய நம்பிக்கைக்குரியவரான சூர்யகுமார் யாதவ் இதயம் நொறுங்கிப்போன சிமிலியை போட்டு தன்னுடைய அதிருப்தியை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மும்பை அணிக்குள் குழப்பம்
சூர்யகுமாரின் இந்த ரியாக்ஷன் மும்பை அணிக்குள் குழப்பம் இருப்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. வீரர்களுக்கும் புதிய கேப்டன் அறிவித்ததில் உடன்பாடு இல்லையாம். அணியின் நலனுக்காக நிர்வாகம் முடிவு எடுத்திருந்தாலும், வீரர்களை கலந்தாலோசித்து இருக்கலாம் அல்லது மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவே நீண்ட நாட்களாக விளையாடிக் கொண்டிருக்கும் ஒருவரை கேப்டனாக போட்டிருக்கலாம் என்பது அவர்களின் எண்ணமாக இருக்கிறதாம்.
மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எத்தனை வீரர்கள் தேவை... பர்ஸில் எவ்வளவு இருக்கு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ