கேப்டன் பதவியில் இருந்து திடீரென நீக்கிய மும்பை இந்தியன்ஸ் - ரோகித் சர்மா ரியாக்ஷன்

Rohit Sharma Reaction: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா தன்னை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதால் அதிருப்தியில் இருக்கிறார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 16, 2023, 09:49 AM IST
  • மும்பை இந்தியன்ஸ் அதிரடி
  • கேப்டன் பொறுப்பில் ரோகித் நீக்கம்
  • புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா
கேப்டன் பதவியில் இருந்து திடீரென நீக்கிய மும்பை இந்தியன்ஸ் - ரோகித் சர்மா ரியாக்ஷன் title=

ஐபிஎல் 2024 ஏலம் இன்னும் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடைபெற இருக்கும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அந்த அணிக்கு 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியிருக்கிறது. அவருக்கு பதிலாக அண்மையில் குஜராத் டைடன்ஸ் அணியில் இருந்து அழைத்துவரப்பட்ட ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாகவும் நியமித்துள்ளது. இது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. கேப்டனாக இருந்து மும்பை அணியை தலைச்சிறந்த உயரத்துக்கு அழைத்துச் சென்ற ரோகித் சர்மாவுக்கு அந்த அணி செய்திருப்பது மிகப்பெரிய அவமரியாதை என்றும் விமர்சித்துள்ளனர்.

மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எத்தனை வீரர்கள் தேவை... பர்ஸில் எவ்வளவு இருக்கு?

அமைதி காக்கும் ரோகித் சர்மா

மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து தன்னை நீக்கியிருக்கும் நிலையில் ரோகித் சர்மா இதுவரை எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அவர் மும்பையில் இருந்து இப்போது தென்னாப்பிரிக்கா சென்றிருக்கிறார். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்திருக்கிறது. அதில், இதுவரை அணியை வெற்றிகரமாக வழிநடத்திய ரோகித் சர்மாவுக்கு நன்றி. இனி வரும் காலத்தில் அணிக்கு களத்திலேயேயும், வெளியேயும் மிகப்பெரிய ஆதரவை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.  

நீக்கத்தின் பின்னணி என்ன?

கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் ஒரு சில காரணங்கள் வெளியாகியுள்ளது. அதில் அடுத்த சில ஆண்டுகளுக்கு அணியை வழிநடத்த இளம் வீரர் வேண்டும் என்ற அடிப்படையில் ஹர்திக் பாண்டியாவை அந்த அணி கேப்டனாக நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் ரோகித் சர்மாவின் பார்ம் மற்றும் பேட்டிங்கின் மீதும் கேள்விகள் எழுந்திருக்கிறது. ரோகித் சர்மா இப்போது இந்திய அணியின் 20 ஓவர் பார்மேட்டில் விளையாடுவதில்லை. ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருவதால், அவருக்கு பதிலாக 20 ஓவர் பார்மேட்டில் இந்திய அணியை வழிநடத்தும் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்திருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. 

ரசிகர்கள் ரியாக்ஷன் என்ன?

ரசிகர்களை பொறுத்தவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த முடிவுக்கு கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். 5 ஐபிஎல் கோப்பைகளையும், ஒருமுறை சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று கொடுத்த கேப்டனுக்கு மும்பை செய்திருப்பது அவமானம் என்று விமர்சித்துள்ளனர். அத்துடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பாலோயர்ஸ் எண்ணிக்கையும் அதிரடியாக குறைந்துள்ளது. ரோகித் சர்மா எதிர்வரும் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக களமிறங்கக்கூடாது என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். 

மேலும் படிக்க | முடிந்தது ரோஹித் காலம்... இனி மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News