ஆறுதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா! வரலாற்று சாதனை

வங்கதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியில் பல வரலாற்று சாதனைகளையும் இந்திய அணி படைத்திருக்கிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 10, 2022, 07:50 PM IST
  • வங்கதேச அணியை வீழ்த்தியது இந்தியா
  • கடைசி போட்டியில் அபார வெற்றி
  • பல சாதனைகளை படைத்தது இந்திய அணி
ஆறுதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா! வரலாற்று சாதனை title=

3வது ஒருநாள் போட்டி

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வெற்றி பெற்ற வங்கதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, பேட்டிங் இறங்கிய இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய இந்திய அணி, இந்த போட்டியில் அசுர பலத்தோடு விளையாடியது. இதனால், இந்திய அணியின் ரன்வேட்டையை வங்கதேச அணியால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இஷான் கிஷன் இரட்டை சதம்

ரோகித் சர்மா காயத்தால் விலகியதால், அவருக்கு பதிலாக களமிறங்கிய இஷான் கிஷன் அதிரடியாக விளையாடினார். தவான் தொடக்கத்திலேயே அவுட்டானாலும், விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து வங்கதேச அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். இதன் மூலம் முதல் ஒரு நாள் சர்வதேச சதத்தை நிறைவு செய்த இஷான் கிஷன், அதனை இரட்டை சதமாகவும் மாற்றி 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். வங்கதேசத்துக்கு எதிராக இந்திய வீரர் ஒருவரின் அதிகபட்ச ரன், இரட்டை சதம் அடித்த இளம் வயது வீரர் என்ற பல சாதனைகளுக்கு சொந்தக்காரரானார்.

மேலும் படிக்க | இப்படி ஒரு சாதனையா? ரோஹித் சர்மா செய்த அதிரடி!

விராட் கோலி அபாரம்

இஷான் கிஷன் உடன் விளையாடிய விராட் கோலியும் சதமடித்தார். ஒருநாள் போட்டியில் அவரின் 44வது சதம் இதுவாகும். கடைசி கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் ஓரளவு ரன்களை எடுக்க, 50 ஓவர் முடிவில் இந்திய அணி,8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்கள் குவித்தது. ஒருநாள் போட்டியில் 400 ரன்களுக்கு மேல் இந்திய அணி அடிப்பது இது 6வது முறையாகும்.

வங்கதேசம் தோல்வி

410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, 182 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதனால் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இருப்பினும் ஒருநாள் தொடரை முதல் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற வங்கதேசம் அணி கைப்பற்றியது. ஆறுதல் வெற்றி என்றாலும் அபார வெற்றியை பெற்று வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது இந்திய அணி.

மேலும் படிக்க | இரட்டை சதம் விளாசி வரலாறு படைத்த இஷான்! ரோகித், சச்சின் எலைட் லிஸ்டில் இடம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News