புதுடெல்லி: ஆசிய கோப்பை ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கிறது. இதுவரை இந்த போட்டித்தொடரில் ஒரு நாட்டிற்கு எதிராக அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆசிய கோப்பை 2023 போட்டி ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. போட்டியைக் காண விரும்பும் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் ஆவலும் கூடிக் கொண்டே செல்கிறது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 17-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.
ரோஹித் சர்மா, சச்சின் டெண்டுல்கர் என இந்திய கிரிக்கெட்டர் உட்பட ஆசிய கோப்பையில் ஒரு நாட்டிற்கு எதிராக அதிக ரன்கள் எடுத்தவர்களின் டாப் 5 லிஸ்ட் இது.
ஆசிய கோப்பை 2023 போட்டியை இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்துகின்றன. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான்- நேபாளம் அணிகள் மோதுகின்றன. பல ஆண்டுகளாக ஆசியக் கோப்பைப் போட்டியில் ஒரு நாட்டிற்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த பேட்டர்களைப் பற்றிப் பார்ப்போம். இந்தியாவின் ரோகித் சர்மா, சச்சின் டெண்டுல்கர் முதல் இலங்கையின் சனத் ஜெயசூர்யா என பலர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க | சஞ்சு சாம்சனின் நிகர சொத்து மதிப்பு இவ்வளவா... முழு தகவல் இதோ!
சனத் ஜெயசூர்யா vs இந்தியா
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா 562 ரன்கள் குவித்தார். ஜெயசூர்யா ஆசிய கோப்பை வரலாற்றில் 25 போட்டிகளில் 6 சதங்களுடன் 1,220 ரன்கள் குவித்து அதிக ரன் குவித்தவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
சனத் ஜெயசூர்யா vs பங்களாதேஷ்
இலங்கையின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சனத் ஜெயசூர்யா, ஆசியக் கோப்பைப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக 496 ரன்கள் எடுத்தார். ஆசிய கோப்பையில் ஒரு நாட்டிற்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது எண்ணிக்கை இதுவாகும்.
சச்சின் டெண்டுல்கர் vs இலங்கை
ஆசிய கோப்பை போட்டியில் இலங்கைக்கு எதிராக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 486 ரன்கள் குவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக, சச்சின் ஆசிய கோப்பையில் 23 போட்டிகளில் 971 ரன்கள் எடுத்தார்.
ரோஹித் சர்மா vs பாகிஸ்தான்
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஆசிய கோப்பை போட்டியில் ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த நான்காவது சாதனையை படைத்துள்ளார். ரோஹித் சர்மா பாகிஸ்தானுக்கு எதிராக 407 ரன்கள் எடுத்துள்ளார், செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெறும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆசிய கோப்பை 2023 போட்டியில் அவர் தனது சாதனையை தொடர வாய்ப்புண்டு என நம்பப்படுகிறது.
மஹ்முதுல்லா vs ஆப்கானிஸ்தான்
ஆசிய கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 126 ரன்கள் குவித்து வங்கதேச ஆல்ரவுண்டர் மஹ்முதுல்லா சாதனை படைத்துள்ளார். ஒரு அணிக்கு எதிராக 5வது அதிகபட்ச ரன் இதுவாகும்.
மேலும் படிக்க | ODI உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ