IND vs SA : 28 ரன்கள் போதும்... விராட் கோலி செய்யப்போகும் சாதனை!

தற்போதைய டி20 உலகக்கோப்பையில் தொடர்ந்து 2 அரைசதங்களை அடித்த விராட் கோலி, இன்றைய போட்டியிலும் அரைசதம் அடிப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Oct 30, 2022, 03:03 PM IST
  • இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டி இன்று நடக்கிறது.
  • பெர்த் மைதானத்தில் இந்திய நேரப்படி 4.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
IND vs SA : 28 ரன்கள் போதும்... விராட் கோலி செய்யப்போகும் சாதனை! title=

8ஆவது டி20 உலகக்கோப்பை தொடர், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மிகவும் பரபரப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் இந்த தொடரில், இன்று மற்றொரு பெரிய போட்டி ஒன்று நடைபெற இருக்கிறது. சூப்பர் 12 சுற்றின் இரண்டாவது பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள், பெர்த் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 நடைபெறுகிறது. 

தென்னாப்பிரிக்க அணி, தனது முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய போதிலும் மழை காரணமாக அப்போட்டி தடை செய்யப்பட்டதால், 1 புள்ளியை மட்டுமே பெற்றது. அதையடுத்து, வங்கதேசத்துடன் நடைபெற்ற போட்டியில், 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. 

இதனால், அதிக ரன்ரேட் மூலம், 3 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. மறுமுனையில், இந்திய அணி பாகிஸ்தான், நெதர்லாந்து என இரண்டு அணிகளையும் வென்று முதலிடத்தில் உள்ளது. 

மேலும் படிக்க | IND vs SA: கேஎல் ராகுல் அல்லது ரிஷப் பந்த்! யாருக்கு அணியில் வாய்ப்பு?

இந்தியாவின் இந்த நிலைக்கு விராட் கோலியின் அசத்தலான ஆட்டம் பெரும் பங்குவகித்தது. பாகிஸ்தான் உடனான போட்டியில், அவரின் அதிரடியாட்டம் எப்படி கைக்கொடுத்ததோ, அதேபோன்று நெதர்லாந்து போட்டியில் அவரின் நிதான ஆட்டமும் இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது. 

இந்நிலையில், இன்றைய போட்டியிலும் அவர் சிறப்பாக விளையாடும்பட்சத்தில், டி20 உலகக்கோப்பை அரங்கில் மிகப்பெரும் சாதனை அவருக்காக காத்திருக்கிறது. அதாவது, டி20 உலகக்கோப்பை தொடரில் இதுவரை 989 ரன்களை எடுத்துள்ள விராட் கோலி, இன்னும் 28 ரன்களை எடுத்தால், டி20 உலகக்கோப்பை அதிக ரன்களை குவித்த பேட்டர் என்ற சாதனையை படைக்க உள்ளார். தற்போது, இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்தனே 1016 ரன்களுடன், டி20 உலகக்கோப்பை அதிக ரன்கள் எடுத்த பேட்டர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 

அதுமட்டுமின்றி, விராட் 11 ரன்களை எடுப்பதன் மூலம், டி20 உலகக்கோப்பையில் 1000 ரன்களை கடக்கும் இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அடைவார். 33 வயதான கோலி, டி20 உலகக்கோப்பையில் இதுவரை 23 போட்டிகளில் விளைாடி 989 ரன்களை குவித்துள்ளார். இதில், 89.9 சராசரியுடன் 12 அரைசதங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிங்க | Ind vs SA: இந்திய அணியிலிருந்து கேஎல் ராகுல் நீக்கப்பட வேண்டுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News