IND vs SA: கேஎல் ராகுல் அல்லது ரிஷப் பந்த்! யாருக்கு அணியில் வாய்ப்பு?

ICC T20 Worldcup 2022 India vs South Africa: உலக கோப்பை 2022-ல் இன்று இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றனர்.  

Written by - RK Spark | Last Updated : Oct 30, 2022, 08:38 AM IST
  • இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகள் இன்று மோதல்.
  • பெர்த்தில் இன்றைய போட்டி நடைபெறுகிறது.
  • இரு அணிகளுக்கும் முக்கிய போட்டியாக உள்ளது.
IND vs SA: கேஎல் ராகுல் அல்லது ரிஷப் பந்த்! யாருக்கு அணியில் வாய்ப்பு? title=

இன்று (ஞாயிற்றுக்கிழமை - அக்டோபர் 30) ​​பெர்த்தில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை 2022 இன் குரூப் 2  சூப்பர் 12 இன் மூன்றாவது ஆட்டத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.  மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த போட்டியில் தொடர்ந்து சொதப்பி வரும் தொடக்க ஆட்டக்காரர் கே.எல் ராகுலுக்கு பதிலாக ரிஷப் பந்தை களமிறக்க இந்திய அணி யோசித்து வருகிறது. இந்திய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், ஞாயிற்றுக்கிழமை பெர்த்தில் நடக்கும் குரூப் 2 ஆட்டத்திற்கு முன்னதாக நடந்த பேசிய அவர், கடந்த ஆண்டு T20 கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றி நம்பிக்கை அளிக்கிறது.  பேட்டிங் வரிசையில் தற்போது தெளிவு கிடைத்துள்ளது.  விக்கெட் கீப்பிங்கில் அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக் உள்ளார்.

மேலும் படிக்க | உலக கோப்பையில் இருந்து வெளியேறியதா பாகிஸ்தான்?

பந்த் உலகின் சிறந்த டி20 பேட்டர்களில் ஒருவர், டாப் அல்லது மிடில்-ஆர்டர் என எங்கும் விளையாட கூடியவர்.  மேட்ச்-வின்னிங் பங்களிப்புகளை உருவாக்கி ஒரு அணியின் இன்னிங்ஸை நங்கூரமிடும் திறன் கொண்டவர். குறிப்பாக சர்வதேச டி20களில், பந்த் இன்றுவரை 52 இன்னிங்ஸ்களில் 127.45 ஸ்ட்ரைக் ரேட்டுடன் உள்ளார்.  பந்த் விஷயத்தில், அவர் இப்போது முதல் நான்கு இடங்களில் ஒன்றிற்கு போட்டியிடுகிறார். சூர்யகுமார் யாதவ் தனது அற்புதமான ஃபார்மில் 4-வது இடத்தில் உள்ளார், மேலும் விராட் கோஹ்லி 3வது இடத்தில் விளையாடுகிறார்.   எனவே பந்த் அணியில் இடம் பெற விரும்பினால் அது தொடக்க ஆட்டக்காரராகத்தான் இருக்கும். அங்குதான் தென்னாப்பிரிக்கா போட்டிக்கான அவரது சாத்தியமான தேர்வு பற்றி விவாதம் உள்ளது.

இரண்டு கேம்களை வைத்து ஒரு வீரரை நீக்குவது சரியாக இருக்காது.  ராகுல் நன்றாக பேட்டிங் செய்கிறார், மேலும் அவர் பயிற்சி ஆட்டங்களில் நன்றாக பேட்டிங் செய்துள்ளார், எனவே நாங்கள் தற்போது அப்படிப்பட்ட எதையும் பார்க்கவில்லை என்று கூறினார்.  தொடக்க டி20 உலகக் கோப்பை ஆட்டங்களில், பாகிஸ்தானுக்கு எதிராக 4 மற்றும் நெதர்லாந்திற்கு எதிராக 9 ரன்களை மட்டுமே கே.எல். ராகுல் எடுத்து உள்ளார்.  இறுதி பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 57 ரன்களையும், அதற்கு முந்தைய போட்டியில் மேற்கு ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிராக 74 ரன்களையும் விளாசி இருந்தார் ராகுல்.  

இந்தியா vs தென்னாப்பிரிக்கா உத்ததேச அணி:

இந்தியா: ரோஹித் சர்மா (c), கேஎல் ராகுல்/ரிஷப் பந்த், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல்/தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி

தென்னாப்பிரிக்கா: டி பவுமா (c), ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், ரிலீ ரோசோவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வெய்ன் பார்னெல், குயின்டன் டி காக், கேசவ் மகராஜ், அன்ரிச் நார்ட்ஜே, ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி

மேலும் படிக்க | ICC T20 World Cup : சிட்னியில் மழை... இந்தியாவின் வெற்றி பயணம் தடைபடுமா...?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News