World Cup 2023: Most Impactful Fielders: உலகக் கோப்பை 2023 தொடரில் இதுவரை அதிக தாக்கத்தை ஏற்படுத்திய பீல்டராக இந்திய வீரர் விராட் கோலி என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (International Cricket Council) தெரிவித்துள்ளது. ஐசிசி வெளியிட்ட அறிக்கையின் படி, உலகக் கோப்பை போட்டி தொடங்கிய கடந்த 13 நாட்களில், விராட் கோலி தனது பீல்டிங்கின் மூலம் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளது.
உலகக் கோப்பை 2023 தொடரில் விளையாடும் அனைத்து அணிகளும் மூன்று போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில், களத்தில் மிகவும் திறமையான பீல்டர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் விராட் கோஹ்லி முதலிடத்தில் உள்ளார்.
களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் விராட் கோலி
உலகக் கோப்பை 2023 போட்டியில் இதுவரை மூன்று கேட்ச்களை விராட் கோஹ்லி பிடித்துள்ளார். இது நியூசிலாந்தின் மேட் ஹென்றி மற்றும் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஆகியோரை பிடித்த கேட்ச்களை விட 2 குறைவாக உள்ளது. அப்படி இருந்தும், இதுவரை 3 கேட்ச்கள் மட்டுமே பிடித்த விராட் கோலி களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். அவருக்கு ஐசிசி அதிகபட்சமாக 22.30 புள்ளிகளை வழங்கியுள்ளது. இங்கிலாந்தின் ஜோ ரூட் 21.73 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்தப் போட்டியில் ரூட் இதுவரை 4 கேட்ச்களை எடுத்துள்ளார்.
இந்தப் பட்டியலில் இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தலா 2 வீரர்கள் முதல் 10 இடங்களில் உள்ளனர். ரவீந்திர ஜடேஜா 11வது இடத்தில் உள்ளார்.
No surprise to see some experienced names at the top of the ratings for fielding impact through the first 13 days of the #CWC23
Details https://t.co/9OdixlIZ3o
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 18, 2023
மேலும் படிக்க - IND vs BAN: டாஸ் வென்றால் ரோஹித் இதைதான் செய்யணும்... ஆடுகளம் யாருக்கு சாதகம்?
3 போட்டிகளில் 14 கேட்சுகளை பிடித்த இந்திய அணி
ஐசிசியின் கூற்றுப்படி, இதுவரை இந்திய அணி 14 கேட்சுகளை பிடித்துள்ளது. 10 ரன்களை சேமித்துள்ளது மற்றும் இதுவரை நடந்த போட்டியில் பந்து பிடித்து வீசுவதில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு உள்ளனர். மூன்று போட்டிகளில் இந்திய அணியால் 2 கேட்ச்கள் மட்டுமே கைவிடப்பட்டு உள்ளன. அதேநேரத்தில் இங்கிலாந்து ஒரே ஒரு கேட்ச்சை மட்டும் மிஸ் செய்துள்ளது. ஆனால் நடந்து முடிந்த மூன்று போட்டிகளில் இங்கிலாந்து ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. அனால் இந்தியா தனது முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
சிறந்த பீல்டருக்கான பதக்கத்தை பெற்றவர்களின் விவரம்
இந்த உலகக் கோப்பையின் ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும், இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளரால் சிறந்த பீல்டருக்கான பதக்கம் வழங்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதற்கு இந்த பதக்கம் விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.
இரண்டாவது போட்டியில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஷர்துல் தாக்கூர் சிறந்த பீல்டருக்கான பதக்கத்தையும், பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது போட்டிக்குப் பிறகு, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுலுக்கு சிறந்த பீல்டருக்கான பதக்கமும் கிடைத்தது.
ஐசிசி பகிர்ந்துள்ள பட்டியல் இதோ.
வீரர் | அணி | புள்ளிகள் |
விராட் கோலி | இந்திய | 22.30 |
ஜோ ரூட் | இங்கிலாந்து | 21.73 |
டேவிட் வார்னர் | ஆஸ்திரேலியா | 21.32 |
டெவோன் கான்வே | நியூசிலாந்து | 15.54 |
ஷதாப் கான் | பாகிஸ்தான் | 15.13 |
க்ளென் மேக்ஸ்வெல் | ஆஸ்திரேலியா | 15 |
ரஹ்மத் ஷா | ஆப்கானிஸ்தான் | 13.77 |
மிட்செல் சான்ட்னர் | நியூசிலாந்து | 13.28 |
ஃபகார் ஜமான் | பாகிஸ்தான் | 13.01 |
இஷான் கிஷன் | இந்தியா | 13 |
உலகக் கோப்பை 2023 இன்றைய போட்டி: இந்தியா மற்றும் வங்கதேசம்
இன்று (அக்டோபர் 19, வியாழன்) உலகக் கோப்பை 2023 போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் மோதுகின்றன. இந்த போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. டாஸ் அரை மணி நேரம் முன்னதாக அதாவது மதியம் 1:30 மணிக்கு நடைபெறும். இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், இந்திய அணி தொடர்ந்து நான்காவது போட்டியில் வெற்றி பெற்று, நியூசிலாந்தை பின்னுக்கு தள்ளி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு வர வாய்ப்புள்ளது.
உலகக் கோப்பை 2023 தொடரில் நியூசிலாந்து தொடர்ந்து நான்காவது வெற்றியைப் பெற்றுள்ளது. அந்த அணி சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 149 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
உலகக் கோப்பை 2023: வெற்றி கணக்கை திறக்காத இலங்கை
இதுவரை உலகக் கோப்பை 2023 போட்டிகளில் இலங்கையைத் தவிர மற்ற 9 அணிகளும் வெற்றிக் கணக்கைத் திறந்துள்ளன. இதில் இங்கிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் அணியும், தென்னாப்பிரிக்காவை நெதர்லாந்து அணியும் வீழ்த்தியது அனைவரின் கவனத்தை பெற்றுள்ளது.
உலகக் கோப்பை 2023 புள்ளி பட்டியலில் நியூசிலாந்து முதலிடம்
ஆனால் இந்த உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மாவின் தலைமையில் இந்திய அணியும், நியூசிலாந்தின் பயணம் மிகவும் அருமையாக உள்ளது. கிவி அணி தனது முதல் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. அதேசமயம் இந்திய அணி முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
அரையிறுதிக்கு தகுதி பெற இந்தியா எத்தனை போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்?
வங்கதேசத்தை வீழ்த்தி, அடுத்த 2 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றால், 6 வெற்றிகளில் 12 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு வலுவான உரிமையை பெறும். ஆனால் அரையிறுதிக்குள் நுழைவதை உறுதி செய்ய இந்திய அணி இன்னும் 3 ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும். அப்போது ரோஹித் மற்றும் பிரிகேட் அரையிறுதிக்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது.
மேலும் படிக்க - IND vs BAN: முகமது ஷமி வங்கதேச போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ