ஜோ ரூட்டைப் போல கிரவுண்டில் பேட்டை நிறுத்தும் விராட் கோலி! - வைரல் வீடியோ!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி, களத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது தனது பேட்டை பிடிமானம் இல்லாமல் தரையில் நிறுத்த முயற்சி செய்யும் வீடியோ ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Jun 23, 2022, 08:58 PM IST
  • இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடக்கவுள்ளது
  • டெஸ்ட் போட்டிக்கு முன்பாக 4 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம்
  • விராட் கோலி கிரவுண்டில் பேட்டை நிறுத்தும் வீடியோ வைரல்
ஜோ ரூட்டைப் போல கிரவுண்டில் பேட்டை நிறுத்தும் விராட் கோலி! - வைரல் வீடியோ! title=

இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி கடந்த ஆண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

4 டெஸ்ட்கள் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் இருந்த நிலையில் 5ஆம் போட்டி கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இப்போட்டி, வரும் ஜூலை 1ஆம் தேதி பர்மிங்காமில் தொடங்கவுள்ளது.

இதற்குத் தயாராகும் வகையில் லீசெஸ்டர்ஷயர் கவுன்டி அணிக்கு எதிரான 4 நாள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

அதன்படி இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. இந்திய அணி வீரர் விராட் கோலி களத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், விராட் கோலி தான் வைத்திருந்த பேட்டை, மைதானத்தில் எவ்வித பிடிமானமும் இல்லாமல் நிற்க வைக்க முயற்சி செய்தார். ஆனால் அது சரியாக நிற்கவில்லை.

மேலும் படிக்க | அடித்து நொறுக்கிவரும் DK! - ICC ரேட்டிங்கில் என்ன இடம் தெரியுமா?

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் அண்மையில் நடந்த டெஸ்ட் போட்டி ஒன்றில் தான் வைத்திருந்த பேட்டை கிரவுண்டில் எவ்வித பிடிமானமும் இல்லாமல் சில நொடிகள் நிற்க வைத்திருந்தார். அந்த வீடியோவும் வைரலாகிக் கவனம் பெற்றது. 

இந்த நிலையில்தான் விராட் கோலியின் இந்த வீடியோவும் தற்போது வைரல் ஆகிவருகிறது.

மேலும் படிக்க | ஸ்டேடியத்தின் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டிய மழை! - வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News