கிங்ஸ் XI பஞ்சாபின் புதிய பயிற்சியாளராக சேவாக் நியமிக்கப்படலாம்

முன்னாள் இந்திய தொடக்க வீரர் சேவாக் விரைவில் முன்னாள் அணி உறுப்பினர் அனில் கும்ப்ளே மற்றும் ராகுல் டிராவிட் போன்றதுணை பயிற்சியாளராக ஆகலாம் குறிப்பிடத்தக்கது.

Last Updated : Dec 24, 2016, 03:58 PM IST
கிங்ஸ் XI பஞ்சாபின் புதிய பயிற்சியாளராக சேவாக் நியமிக்கப்படலாம் title=

புதுடெல்லி: முன்னாள் இந்திய தொடக்க வீரர் சேவாக் விரைவில் முன்னாள் அணி உறுப்பினர் அனில் கும்ப்ளே மற்றும் ராகுல் டிராவிட் போன்றதுணை பயிற்சியாளராக ஆகலாம் குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல். தொடரில் விளையாடும் அணிகளில் கிங்ஸ் XI பஞ்சாப் அணியும் ஒன்று. அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் சஞ்சய் பாங்கர். இவர் அந்த அணியின் துணை பயிற்சியாளராக இருந்து, 2014-ம் ஆண்டு தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.

அந்த அணிக்காக விளையாடிய சேவாக், தற்போது ஆலோசகராக உள்ளார். சேவாக் அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்ற பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்தது.

இந்நிலையில் சஞ்சய் பாங்கர் தனது தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

சஞ்சய் பாங்கர் இந்திய சீனியர் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News