WI vs IND: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர் தோல்விக்கு முற்றுபுள்ளி வைக்குமா இந்திய அணி?

Cricket News In Tamil: சிக்கலில் இந்திய அணி. மேற்கிந்திய தீவுகள் vs இந்தியா மோதும் மூன்றாவது டி20 சர்வதேசப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 8, 2023, 05:23 PM IST
  • இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் வெ.இண்டீஸ் 2-0 என முன்னிலை.
  • இன்றைய போட்டியில் கட்டாயம் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும்.
  • இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 27 போட்டிகளில் நேருக்கு மோதி உள்ளன.
WI vs IND: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர் தோல்விக்கு முற்றுபுள்ளி வைக்குமா இந்திய அணி? title=

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் செய்திகள்: ரோவ்மேன் பவல் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் (Team West Indies) இரண்டாவது டி20  போட்டியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம், இந்தியாவுக்கு (Team India) எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் அந்த அணி 2-0 என முன்னிலை பெற்றது. இன்று (ஆகஸ்ட் 8, செவ்வாய்க் கிழமை) கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது டி20 போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர் தோல்விக்கு மூன்றாவது டி20 சர்வதேசப் போட்டியில் இந்திய அணி முற்றுபுள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

இன்றைய போட்டியில் கட்டாயம் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும். இல்லையென்றால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி இழக்க நேரிடும். இக்கட்டான சூழ்நிலையில், மூன்றாவது டி20 போட்டியில் களம் இறங்கும் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேருக்கு நேர் மோதிய ஆட்டத்தின் முடிவுகள்: 
ஒட்டுமொத்தமாக 27 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு மோதியுள்ளனர். அதில் இந்திய அணி 17 போட்டியிலும், மேற்கிந்திய தீவுகள் 09 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளனர். ஒரு போட்டி முடிவு எட்டப்படவில்லை.

அதபோல மேற்கிந்திய தீவுகள் நாட்டில் வேலியடிய 09 போட்டிகளில் இந்திய அணி நான்கு போட்டியிலும், வெஸ்ட் இண்டீஸ் ஐந்து போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

மேலும் படிக்க - தோனி vs கோலி vs சச்சின்: மூவரில் யாரிடம் அதிக சொத்துக்கள் உள்ளது தெரியுமா?

3வது டி20 போட்டி விவரங்கள்:
அணிகள்: வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா 2023,
இடம்: பிராவிடன்ஸ் ஸ்டேடியம், கயானா
போட்டிக்கனா நேரம்: ஆகஸ்ட் 8, இரவு 8:00 (IST)
கிரிகெட் நேரலை: டிடி ஸ்போர்ட்ஸ், ஃபேன்கோட் மற்றும் ஜியோசினிமா

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் போதும் பிராவிடன்ஸ் ஸ்டேடியம் குறித்த நிலவரம்:
கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் உள்ள மேற்பரப்பு பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு சமநிலையான சாதகமாக இருக்கும். ஓவர்கள் வீச வீச ஸ்பின்னர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். இந்த ஆடுகளத்தை பொறுத்த வரை டாஸ் வென்ற கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யலாம்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் விளையாடும் 11 வீர்கள் (கணிப்பு)
பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன் (வாரம்), ரோவ்மேன் பவல் (கேட்ச்), ஷிம்ரோன் ஹெட்மியர், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேசன் ஹோல்டர், அக்கேல் ஹொசைன், அல்ஸாரி ஜோசப், ஓபேட் மெக்காய்

இந்திய அணியில் விளையாடும் 11 வீர்கள் (கணிப்பு)
இஷான் கிஷன் (WK), சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேட்ச்), சஞ்சு சாம்சன், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், உம்ரான் மாலிக், குல்தீப் யாதவ்

மேலும் படிக்க - IND vs WI: பும்ரா, அஸ்வின் சாதனைகளை முறியடித்த ஹர்திக் பாண்டியா! அப்படி என்ன செய்தார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News