MI vs DC: வெற்றி பெறுவது யார்? மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முக்கியமான போட்டி

இன்றைய மும்பைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இன்னும் சற்று நேரத்தில் மும்பை அணி பேட்டிங் செய்யவுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 2, 2021, 03:18 PM IST
  • டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு.
  • மும்பைக்கு முக்கியமானதாக இருப்பதால், ஆட்டம் பரபரப்பாக இருக்கும்.
  • மும்பை vs டெல்லி இடையே இதுவரை 29 போட்டிகள் நடந்துள்ளன.
MI vs DC: வெற்றி பெறுவது யார்? மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முக்கியமான போட்டி title=

மும்பை vs டெல்லி: இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2021) தொடரில் இன்று (அக்டோபர் 2) டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அழுத்தத்தில் உள்ளது. உண்மையில், அவர்கள் இந்த போட்டியில் தோற்றால், பிளே-ஆஃப் வாய்ப்பை அடைவது கடினமாகிவிடும்.

டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ்:
இன்றைய மும்பைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இன்னும் சற்று நேரத்தில் மும்பை அணி பேட்டிங் செய்யவுள்ளது. இன்றைய போட்டி மும்பை அணிக்கு முக்கியமானதாக இருப்பதால், ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை

ஆறாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ்:
இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், அந்த அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று, 10 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்தாண்டு புள்ளிகள் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. மீதமுள்ள மூன்று போட்டிகளில் வென்றால், மும்பை எளிதாக பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். இருப்பினும், ஒரு தோல்வி அதன் நிகர ரன் விகிதம் மற்றும் பிற அணிகளின் போட்டியின் முடிவுகளை சார்ந்து இருக்கும்.

பிளேஆஃப் சுற்றுக்கு நுழைவது கிட்டத்தட்ட உறுதி:
டெல்லி கேபிடல்ஸ் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் அந்த அணி 8 வெற்றி பெற்றுள்ளார். 16 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இப்போது டெல்லி அணி ஒரு போட்டியில் கூட வெல்லாவிட்டாலும், பிளேஆஃப் சுற்றுக்கு நுழைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

மும்பை vs டெல்லி:
வெளிநாடு மைதானங்களில் இரு அணிகளும் 7 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், மும்பை 4 மற்றும் டெல்லி 3 வெற்றி பெற்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) இரு அணிக்கும் இடையே இதுவரை 5 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில், மும்பை இந்தியன்ஸ் 4 போட்டிகளில் வென்றுள்ளது. ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ளது.

ALSO READ | சதமடித்து சாதனை செய்தார் MS Dhoni: IPL-ல் தல தோனிக்கு புதிய ரெகார்ட்

மும்பை அதிக வெற்றி:
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே இதுவரை 29 போட்டிகள் நடந்துள்ளன. இதில், மும்பை இந்தியன்ஸ் 16 வெற்றி பெற்றுள்ளது, 13 ல் தோல்வியை சந்தித்துள்ளது. இந்தியாவில் இருவருக்கும் இடையே 22 போட்டிகள் நடைபெற்றன. இதில் மும்பை 12 மற்றும் டெல்லி 10 ல் வெற்றி பெற்றது.

ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இன்று பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்கும். போட்டியின் நேரடி ஒளிபரப்பை பல்வேறு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 எச்டி ஆகியவற்றில் காணலாம். ஐபிஎல் போட்டியின் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம். 

ALSO READ | ஹர்திக் மற்றும் திவாரியின் ஆட்டத்தால் வெற்றி பெற்றது மும்பை அணி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News