இந்திய அணியோட மிடில் ஆர்டர் ஒன்னும் பெரிசா இல்லை - யுவராஜ் சிங் பளீச் பதில்

இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் இந்திய அணியில் மிடில் ஆர்டரை பலப்படுத்த வேண்டும் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.    

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 11, 2023, 09:08 PM IST
  • இந்தியா உலகக்கோப்பை வெல்லுமா?
  • என்னால் இப்போது சொல்ல முடியாது
  • மிடில் ஆர்டர் பலவீனமாக இருக்கிறது
இந்திய அணியோட மிடில் ஆர்டர் ஒன்னும் பெரிசா இல்லை - யுவராஜ் சிங் பளீச் பதில் title=

ஐசிசி ஒரு நாள் போட்டிக்கான உலகக் கோப்பை 2023 அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது.இதனால் இந்திய அணி இம்முறையும் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவ்ராஜ் சிங், இந்திய அணி இம்முறை உலகக்கோப்பையை வெல்லுமா இல்லையா என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார். மிடில் ஆர்டர் கவலையளிப்பதாகவும், இதனை சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் படிக்க | விராட் கோலி ஒன்னும் சூப்பர் இல்லை, வார்னர் இனி அவ்வளவு தான் - ஆகாஷ் சோப்ரா

உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா?

யூடியூப் சேனல் ஒன்றுக்கு யுவ்ராஜ் சிங் பேட்டியளித்தபோது,  "உண்மையைச் சொல்வதானால், இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லப் போகிறார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. இந்தியா வெல்லும் என்று ஒரு தேசபக்தராக விரும்புகிறேன் என்பதை தான் என்னால் சொல்ல முடியும். இந்திய அணியின் மிடில் ஆர்டரில் காயங்கள் குறித்து நிறைய கவலைகள் இருப்பதை நான் காண்கிறேன். கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்லாதது ஏமாற்றமளிக்கிறது" என தெரிவித்துள்ளார்.

மிடில் ஆர்டரில் அணிக்கு முன்னேற்றம் தேவை

தொடர்ந்து அவர் பேசும்போது, 'டீம் இந்தியாவின் டாப் ஆர்டர் நன்றாக உள்ளது, ஆனால் மிடில் ஆர்டரை ஒழுங்கமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஸ்லாட்டுகள் 4 மற்றும் 5 மிகவும் முக்கியமானவை. ரிஷப் பண்ட் ஐபிஎல் அணிக்கு நான்காவது இடத்தில் பேட்டிங் செய்கிறார் என்றால், அவர் தேசிய அணியிலும் நான்காவது இடத்தில் வர வேண்டும். நான்காம் நம்பர் பேட்ஸ்மேன் ஒரு அட்டகாசமான ரன் அடிப்பவராக இருக்க முடியாது. அவர் அழுத்தத்தைக் கையாளக்கூடியவராக இருக்க வேண்டும். நாக்-அவுட் போட்டிகள் போன்ற அழுத்தமான போட்டிகளில் விளையாடும்போது, அதில் இந்தியா வீரர்களை சோதனை செய்து கொண்டிருக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.

4வது இடத்தில் யாருக்கு வாய்ப்பு

4வது இடத்தில் இந்திய அணியில் விளையாட தகுதியானவர்கள் யார் என யுவ்ராஜ் சிங்கிடம் கேட்டபோது,  ரிங்கு சிங் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் அந்த இடத்திற்கு தகுதியானவர்கள் என கூறினார். ஐபிஎல் போட்டிகளில் ரிங்கு சிங் நன்றாக பேட்டிங் செய்தார் என்பதால், அழுத்தமான போட்டிகளில் சிறப்பாக ஆடிய விதத்தை இந்திய அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என யுவ்ராஜ் சிங் கூறினார். மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கார் நியமிக்கப்பட்டது நல்ல முடிவு என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | கடைசி சான்ஸ்! ஈஸியா விட்டுட மாட்டோம்! வீரியமாக களமிறங்கும் சீனியர் கிரிக்கெட்டர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News