Last ODI World Cup: இந்த ஆண்டு நடைபெறும் ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகளே சில பிரபல வீரர்களுக்கு கடைசி உலகக்கோப்பையாக இருக்கலாம்
இந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளது, ஏராளமான மூத்த கிரிக்கெட் வீரர்கள் இந்தப் போட்டியில் தங்கள் திறமையை நிரூபிக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்
2023 அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன
இந்த ஆண்டு நடைபெறும் ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகளே சில பிரபல வீரர்களுக்கு கடைசி உலகக்கோப்பையாக இருக்கலாம்
விரைவில் 37 வயதை எட்டவுள்ள டேவிட் வார்னர், ஆஸ்திரேலியாவுக்காக 142 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். நிச்சயமாக, இந்த ஆண்டு அவரது நாட்டிற்கு இது அவரது கடைசி ஒருநாள் உலகக் கோப்பையாக இருக்கும்
இந்த ஆண்டு உலகக் கோப்பையில் இந்தியாவின் கேப்டனாக களம்றங்கும் ரோஹித் ஷர்மாநிச்சயமாக கோப்பையை கைப்பற்றுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், இது அவருக்கு கடைசி உலகக்கோப்பையாக இருக்கலாம்
பங்களாதேஷ் அணியின் முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹசன் 2006 ஆம் ஆண்டு தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார். இதுவரை 234 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், தனது கடைசி ஒருநாள் உலகக் கோப்பையை இந்த ஆண்டு விளையாடுவார் என்று சொல்லப்படுகிறது
34 வயதான ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியாவுக்காக 142 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 44.5 சராசரியுடன் 4939 ரன்கள் எடுத்துள்ளார். வயது அதிகமாகிவிட்டதால், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தின் கடைசி ஒருநாள் உலகக் கோப்பை இதுவாக இருக்கும்
கோஹ்லி ஏற்கனவே இந்திய அணிக்காக 282 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். முன்னாள் இந்திய கேப்டன் 67 அரைசதங்கள் எடுத்துள்ளார்