’டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் மாதிரி ஆடணும்’ இஷான் கிஷனுக்கு ஜாகீர்கான் அறிவுரை

டெஸ்ட் போட்டியில் விளையாடும்போது, அதற்கே உரிய பாண்டியில் டெஸ்ட் பேட்டிங்கில் ஆட வேண்டும் என இளம் வீரர் இஷான் கிஷனுக்கு ஜாகீர்கான் அறிவுரை வழங்கியுள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 24, 2023, 09:11 PM IST
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்படி ஆடக்கூடாது
  • இதனை சீக்கிரம் இஷான் கிஷன் மாத்திக்கணும்
  • இந்திய அணி முன்னாள் வீரர் ஜாகீர்கான் அறிவுரை
’டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் மாதிரி ஆடணும்’ இஷான் கிஷனுக்கு ஜாகீர்கான் அறிவுரை title=

குயின்ஸ்பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாம் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் அடித்து இந்திய அணி ஆல் அவுட் ஆனது. வழக்கம்போல் சிறப்பாக ஆடிய விராட் கோலி 29-வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். சிறப்பாக ஆடிய ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் 57 ரன்களும், கேப்டன் ரோகித் சர்மா 80 ரன்களும் அடித்து அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். மிடில் ஆர்டரில் ஜடேஜா 61 ரன்கள் எடுக்க, ரவிச்சந்திரன் அஸ்வின் 56 ரன்கள் அடித்து கீழ் அணிக்கு நங்கூரத்தை பாய்ச்சினர். ஆனால் எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷன் பெரிய ஸ்கோர் குவிக்கவில்லை. 

மேலும் படிக்க | ஒருநாள் உலக கோப்பையில் ரோஹித் இல்லையா? வெளியான பகீர் தகவல்!

இரண்டாவது களமிறங்கிய இஷான் கிஷன் 37 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரின் அவுட்டை இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர்கான் விமர்சித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் விளையாடும்போது, அதற்கான பேட்டிங் அணுகுமுறையோடு விளையாட வேண்டும், ஆனால் இஷான் கிஷனின் பேட்டிங் பார்க்கும்போது அவர் இன்னும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து வெளியே வரவில்லை என்பது தெளிவாக தெரிகிறது என சாடியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,  இஷான் கிஷன் இரண்டாவது டெஸ்டில் நன்றாக பேட்டிங் துவங்கினார். ஆனால் அவர் ஆட்டம் இழந்த விதம் சற்றும் ஏற்க முடியாத அளவிற்கு இருக்கிறது. 

டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்துவிட்டால் எந்தவித பிரச்சினையும் இல்லை. ஆனால் 20-30 பந்துகள் பிடித்துவிட்டு இப்படி தவறான ஷார்ட் விளையாடி ஆட்டம் இழப்பது ஏற்க முடியாதது. இஷான் கிஷன் டி20 மனநிலையிலிருந்து வெளியில் வரவேண்டும். இப்படி நன்றாக துவக்கம் கிடைத்த பிறகு தவறான ஷார்ட் விளையாடுவது என்பது அவரது அடுத்தடுத்த போட்டிகளிலும் பாதிப்பை உண்டாக்கும். அந்த மனநிலையை தவிர்க்க வேண்டும். இது டி20 பாதிப்பினால் வருவது. அதை விரைவில் சரி செய்து கொள்ள வேண்டும்.” என்று அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க | சிக்ஸர் அடிக்கும் இளைஞர்களுக்கு கால்கட்டு! கவலை வேண்டாம்! இது திருமண செண்டிமெண்ட் காலம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News