“சீன வைரசை வென்றேன், சொந்த மக்களிடம் தோற்றேன்” 103 வயது தமிழக மூதாட்டி வருத்தம்!!

103 வயதான ஹமீதா பீ, கோவிட் -19 க்கு எதிரான போரில் துணிச்சலுடன் போராடி குணமடைந்து வீடு திரும்பினார். ஆனால் அவர் எதிர்பாராத ஏமாற்றம் அவர் வீட்டருகில் தான் காத்திருந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 16, 2020, 03:46 PM IST
  • அவரது அண்டை வீட்டார் அவரை வரவேற்பதற்கு பதிலாக வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளனர்.
  • ஹமீதா பீயின் COVID-19 பரிசோதனை நேர்மறையாக வரவே, அவர் ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
  • சிகிச்சைக்குப் பிறகு அவர் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்துள்ளார்.
“சீன வைரசை வென்றேன், சொந்த மக்களிடம் தோற்றேன்” 103 வயது தமிழக மூதாட்டி வருத்தம்!! title=

ஆம்பூர், தமிழ்நாடு: கொரோனா காலம் நமக்கு பல விசித்திரங்களைக் காட்டுகிறது. பலர் இந்தத் தொற்றைக் கண்டு அஞ்சி நடுங்கும் அதே நேரம் , இன்னும் பலர், இதை எதிர்த்து உறுதியுடன் போராடி வெற்றி காண்கின்றனர். அவ்வகையில் தமிழகத்தில் ஒரு மூதாட்டி இந்த கொடிய வைரசை எதிர்கொண்டு வெற்றி பெற்றார். ஆனால் அவர் எதிர்பாராத ஏமாற்றம் அவர் வீட்டருகில் தான் காத்திருந்தது.

103 வயதான ஹமீதா பீ (Hameedha Bee), கோவிட் -19 (Covid-19) க்கு எதிரான போரில் துணிச்சலுடன் போராடி குணமடைந்து வீடு திரும்பினார். ஆனால் அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தபோது, அவரது அண்டை வீட்டார் அவரை வரவேற்பதற்கு பதிலாக வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளனர்.  இந்தியாவில் மிக மோசமான அளவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தின் (Tamil Nadu) ஆம்பூரில் (Ambur) இந்த மூதாட்டி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

அண்டை வீட்டார் பாகுபாடு காட்டியதாக ஹமீதா பீயின் குடும்பத்தினர் அளித்த குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, புதன்கிழமை விசாரணை தொடங்கப்பட்டது. வருவாய் கோட்ட அலுவலர் காயத்ரி சுப்பிரமணி தலைமையிலான அதிகாரிகள் குழு அக்குடும்பத்தை வந்து சந்தித்தது. "ஹமீதா பீயின் வயது 103 என்பதை நாங்கள் அறிந்த நாள் முதலே நாங்கள் அவரை சிறப்பாக  கவனித்துக்கொண்டோம்," என்று கிராம நிர்வாக அதிகாரி கூறினார். அவரது வயது குடும்பம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டது என்றும், அதற்கான எந்த பதிவுகளும் இல்லை, மற்றும் குடும்பம் அவரது ஆதார் அட்டையை தொலைத்து விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

ALSO READ: மதுரை மாவட்டத்தில் 7 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு...!

"நாங்கள் அவருக்கு ஓய்வூதியம் வழங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். அவர் வேறு தாலுகாவைச் சேர்ந்தவர் என்றாலும், ஹமீதா பீக்கு  முதியோர் ஓய்வூதியத்தை வழங்க நாங்கள் விரைவாக பணியாற்றி வருகிறோம்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹமீதா பீயின் COVID-19 பரிசோதனை நேர்மறையாக வந்த பிறகு, அவர் ஒரு வாரம் அம்பூரில் உள்ள பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் சிகிச்சைக்குப் பிறகு விரைவாக குணமடைந்தார் என அதிகாரிகள் கூறினர்.

குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இந்த வயதான பெண்மணி மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக என்ன செய்யப்பட்டுள்ளது என்று கேட்டபோது, உள்ளூர் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் அவரது உதவியாளர் குறிப்பாக ஹமீதா பீயை கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரி கூறியுள்ளார்.

"இன்றும், நாங்கள் அவரை சென்று பார்த்தோம். பழங்கள் வாங்கிக் கொடுத்துள்ளோம். அவர் நன்றாக இருக்கிறார். அவர் தொந்தரவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் முழுமையாக விசாரித்தோம். ஹமீதா பீயும் அவரது குடும்பமும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன" என்று அதிகாரி கூறினார்.

ஹமீதா பீயின் சோதனை முடிவுகள் எதிர்மறையாக வந்தவுடன்தான் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார் என்றும் சிகிச்சைக்குப் பிறகு அவர் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தலில் (Quarantine) இருந்துள்ளார் என்றும் சுகாதாரப் பணியாளர்கள் அவரது அண்டை வீட்டாருக்கு விளக்கி வருகிறார்கள். 

Trending News