கட்சராயன் ஏரியை 31ம் தேதி ஸ்டாலின் பார்வையிடுகிறார்

Last Updated : Aug 27, 2017, 09:26 AM IST
கட்சராயன் ஏரியை 31ம் தேதி ஸ்டாலின் பார்வையிடுகிறார் title=

சேலம் மாவட்டம் கட்சராயன் ஏரியை தமிழக சட்டமன்ற செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 31-ம் தேதி பார்வை இடுவதாக அறிவித்து உள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள ஏறி, குளம் உள்ளிட்ட நீா்நிலைகளை தூா் வாறுவதற்கும், குறிப்பிட்ட அளவில் வண்டல் மண் எடுப்பதற்கும் தமிழக அரசு சார்ப்பில் விவசாயிகளுக்கும், மண்பாண்ட தொழிலாளா்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதே போன்று திமுக சார்பிலும் தமிழகம் முழுவதும் உள்ள ஏறி, குளம் உள்ளிட்ட நீா் நிலைகளை தூா்வாறுவதற்கு அக்கட்சியின் செயல் தலைவா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார்.

வருகிற 31ம் தேதி கட்சராயன் ஏரியை மு.க.ஸ்டாலின் பார்வையிட உள்ளதாக தி.மு.க. சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Trending News