திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளைக்கு ஏசியால் நேர்ந்த சோகம்!

AC Explosion In Chennai : சென்னை பெரம்பூரில் AC வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் பால் வியாபாரி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.  

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Aug 1, 2022, 11:23 AM IST
  • ஆடி மாதம் என்பதால் மனைவி அம்மா வீட்டு சென்றுள்ளார்
  • பெட்ரூமில் ஏசி வெடித்ததால் பரவிய தீ
  • பயங்கர சத்தம் கேட்டு பதறி வந்த தந்தை
திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளைக்கு ஏசியால் நேர்ந்த சோகம்!  title=

சென்னையில் AC வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் பால் வியாபாரி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பெரம்பூர் திருவிக நகர் மணவாளன் தெருவை சேர்ந்தவர் ஷியாம். 27 வயதாகும் இவர் அப்பகுதியில் பாக்கெட் பால் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இவருக்கும் சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. ஆடி மாதம் என்பதால் மனைவி அவரது அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார். 

மேலும் படிக்க | நாள் முழுவதும் AC இயக்கினாலும் மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் இருக்க இதை பொருத்தவும்

இதனால் வீட்டில் தனது பெற்றோருடன் ஷியாம் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் ஷியாம்  மணவாளன் தெருவில் உள்ள அவரது வீட்டின் கீழ் தளத்தில் உள்ள படுக்கை அறையில் தனியாக தூங்கிக் கொண்டிருந்துள்ளார். 

அப்போது திடீரென வெடி சத்தம் கேட்டதால் வீட்டின் மேல் தளத்தில் தூங்கிக் கொண்டிருந்த அவரது தந்தை பிரபாகரன் அலறி அடித்துக் கொண்டு கீழே வந்து பார்த்தபோது வீடு முழுவதும் புகை மண்டலம் இருந்துள்ளது. இதனைக் கண்டு  அதிர்ச்சி அடைந்த தந்தை உள்புறமாக தாழிட்டிருந்த கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற பார்த்துள்ளார். 

அப்போது AC வெடித்து சிதறி அதனால் ஏற்பட்ட தீ விபத்தில்  ஷியாம் உடல் கருகி  இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

உடனே இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த திருவிக நகர் காவல் துறையினர் ஷியாமின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் ஏசி பயன்படுத்தும் போது கவனமாக செயல்பட வேண்டும் என்றும், ஏசியில் பழுது உள்ளதாக என்பதை சரி பார்க்க வேண்டியது அவசியம் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். திருமணமான 6 மாதத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | நாள் முழுவதும் ஏசியில் இருக்கீங்களா... பாதிப்புகளை தெரிந்துகொள்ளுங்கள்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News