மீண்டும் ட்வீட் போட்ட ஏ.ஆர்.ரகுமான்!! “தன்னாட்சி” உரிமை முக்கியம்!!

யாரோடு தலையீடு இல்லாமல் தன்னாட்சியாக செயல்படுவது மிக முக்கியம் என இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 4, 2019, 06:58 PM IST
மீண்டும் ட்வீட் போட்ட ஏ.ஆர்.ரகுமான்!! “தன்னாட்சி” உரிமை முக்கியம்!! title=

சென்னை: கஸ்தூரிரங்கன் குழுவினர் பரிந்துரை செய்த புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தின்படி தமிழ்நாடு உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயப்படுத்தல் தொடர்பான பரிந்துறையை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு வந்த நிலையில், புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தில் சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

மும்மொழி கல்வித்திட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்ததை அடுத்து, அதுக்குறித்து ''அழகிய தீர்வு. தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல.. திருத்தப்பட்டது வரைவு'' என ட்வீட் போட்டு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். மீண்டும் ஒரு ட்வீட் போட்டு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

எப்பொழுதும் தன் வேலைகளில் மட்டும் கவனமாக இருக்கும் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான், தமிழ் மொழிக்காக குரல் கொடுத்தார். இதனையடுத்து, இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், "அட்டானமஸ் (Autonomous) என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேம்பிரிட்ஜ் ஆங்கில அகராதி உள்ளது" என்று பதிவிட்டிருக்கிறார்.

அதாவது "அட்டானமஸ்" என்றால் தன்னாட்சி உரிமையுடையது என்று பொருள். அதாவது யாரோடு தலையீடு இல்லாமல் தன்னாட்சியாக செயல்படுவது தான் அட்டானமஸ் என்பதன் பொருள் ஆகும்.

 

Trending News