பைக் வைத்திருப்பவர்கள் உஷார்! இந்த மாடல் பைக் தான் அதிகம் திருடு போகிறதாம்!

திருடர்களை கூப்பிடும் R15, duke, Dio பைக்குகள்... சென்னையில் நடைபெற்றும் பைக் திருட்டால் அதிர்ச்சியில் இளசுகள்... லட்சங்களை நொடியில் லவட்டிக்கொண்டு செல்லும் விநோத திருடர்கள்!  

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Mar 13, 2024, 04:57 PM IST
  • R15, Duke, Dio பைக்குகள் அதிக திருடுபோகிறது.
  • இவை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
  • சென்னையை மிரட்டும் பைக் திருடர்கள்.
பைக் வைத்திருப்பவர்கள் உஷார்! இந்த மாடல் பைக் தான் அதிகம் திருடு போகிறதாம்!  title=

சென்னையில் சமீப நாட்களாக பைக் திருடர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. லட்சங்களில் ஆசையாய் பைக்கை வாங்கி வாசலில் கெத்தா விட்டுச்சென்றால், அலேக்காக இரவோடு இரவாக 2 நிமிடங்கள் கூட செலவிடாமல் 2 லட்சம் ரூபாய் பைக்குகளை திருடர்கள் திருடிச்செல்கின்றனர். பைக் காணாமல் போனதும், வீட்டில் இருக்கும் சிசிடிவியை செக் செய்தால், அலேக்காக பைக் திருடர்கள் முகமூடி கூட அணியாமல் பைக்கை தூக்குகிறார்கள். முன்பெல்லாம் சிசிடிவி இருந்தால் குற்றங்கள் குறையும் என விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் அந்த சிசிடிவிக்கு எல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம் என தொளத்தாக சுற்றும் இந்த பைக் திருடர்கள் பொதுமக்களை அலறவிடுகிறார்கள். 

மேலும் படிக்க | தமிழகத்தில் பிறை தெரிந்தது.. இன்று முதல் ரமலான் நோன்பு ஆரம்பம்: தலைமை காஜி அறிவிப்பு

பைக் திருடர்களை பிடித்து விசாரித்தால், தங்களை R15, duke, Dio பைக்குகள் கூப்பிடுவதாகவும், அதனால் தான் அவற்றை மட்டும் குறி வைத்து திருடுவதாகவும் ஒரு கதை சொல்கிறார்களாம். இதில் டியோ பைக் மட்டும் தான் 1 லட்சம். மற்ற பைக்குகள் எல்லாம் இரண்டரை லட்சம் முதல் மூன்று லட்சம் வரை விற்பனையாகிறது. அதோடு புதிய பைக்குகளை திருடி விற்றால் நிச்சயம் நல்ல விலை போகும் என்பதால் அசால்டாக திருடிவிடுகிறார்கள். பைக் திருடுபோனாலும், பைக்குக்கு வாங்கிய இஎம் ஐயை கட்டும் நடுத்தர குடும்ப இளைஞர்களின் கண்ணீர் வேதனை அளிக்கிறது. 

அப்படி தான் இரு தினங்களுக்கு முன்பு தனது R1 5 பைக்கை பறிகொடுத்த இளைஞர் பறிதவித்து வருகிறார்.  போலீசிடம் புகார் அளித்தாலும், தினமும் இது போல 5 வழக்குகளாவது வருவதாக சொல்கிறார்களாம். பைக் திருட்டு வழக்குகளை போலீஸ் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்றும், இதனால் திருடர்கள் காலரை தூக்கிக்கொண்டு சிசிடிவியில் முகம் தெரியும் என்று தெரிந்தும் ஜாலியாக சுற்றி வருவதாகவும் பைக்கை பறிகொடுத்தவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பைக் திருட்டு என்பது சாதாரண குற்றமாக பார்க்கப்படும் வரை, அந்த குற்றத்தை தடுக்க முடியாது. இந்த பைக் திருடர்கள் அடுத்ததாக வீட்டுக்குள் புகுந்து திருடவும் தயங்க மாட்டார்கள். அதனால் போலீசார் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து சென்னையில் பைக் திருட்டு குற்றங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

மேலும் படிக்க | குடியுரிமை திருத்தச் சட்டம்! மத்திய பாஜக அரசை எதிர்த்து மக்களுக்காக குரல் குடுத்துள்ள விஜய்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News