பழைய கெத்து... புதிய பொழிவு - விரைவில் Yamaha RX 100 - முக்கிய தகவல்கள் இதோ!

Yahama RX 100 Bike Latest Update: புதிய பொலிவுடனும், பழைய கெத்துடனும் Yamaha RX 100 பைக் விரைவில் அறிமுகமாக உள்ள நிலையில், அதுகுறித்த முக்கிய தகவல்களை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 5, 2024, 07:12 PM IST
  • இந்த பைக் 1985ஆம் ஆண்டு அறிமுகமானது.
  • 2019ஆம் ஆண்டு இந்த பைக் தடை செய்யப்பட்டது.
  • விரைவில் இந்த பைக் புதிய பொழிவுடமன் அறிமுகமாக உள்ளது.
பழைய கெத்து... புதிய பொழிவு - விரைவில் Yamaha RX 100 - முக்கிய தகவல்கள் இதோ! title=

Yahama RX 100 Bike Latest Update News in Tamil: கார் ஓட்டுவதை விட இளைஞர்களுக்கு பைக் ஓட்டுவது என்பது மிகவும் விருப்பமானதாகும். கார் வசதிப்படைத்தவர்களுக்கானது என்பது ஒருபுறம் இருந்தாலும், பைக்கை தான் நடுத்தர வர்க்கத்தினர் வாங்குவதற்கு ஆசைப்படுவார்கள். சின்ன வயதில் இருந்தே பலரும் தங்களுக்கு என ஒரு பைக் வாங்க வேண்டும் என்பதை ஒரு குறிக்கோளாக கொண்டே வாழ்ந்து வருவார்கள். 

Pulsar, Apache, Duke போன்ற பைக்குகளை தற்போதைய இளைஞரகள் அதிகம் விரும்புவதாக கூறப்பட்டாலும், Yamaha நிறுவனத்தின் RX 100 பைக் அதில் தனித்து தெரியும். வசந்த் & கோ நிறுவனத்தின் விளம்பரத்தில் சொல்வது, அந்த காலம் இந்த காலம் என எந்த காலத்திலும் Yamaha RX 100 என்றாலே தனி கெத்துதான் என்பதை யாராலும் மறக்க முடியாது. 

பைக் பிரியர்களுக்கு நற்செய்தி...

அந்தளவிற்கு  Yamaha RX 100 பைக்கிற்கு முக்கியத்துவம் அளிப்பதற்கான காரணம், 90 காலகட்டத்தில் சாலைகள் முழுவதும் ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன. அதன் மிரட்டலான டிசைன், ஊரையே அலறவிடும் சத்தம், பக்காவான மைலேஜ் ஆகியவை Yamaha RX 100  பைக்கை தனித்துகாட்டுகின்றன. இந்த பைக் தடையில் இருந்து தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கப்போவதாக நீண்ட நாள்களாக செய்திகள் வெளியாகின. அந்த வகையில், Yamaha RX 100 பைக்கின் வரலாறு மற்றும் அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் இதில் காணலாம். 

மேலும் படிக்க | 2024 ஜனவரியில் இத்தனை லட்சம் பைக்குகள் விற்பனையா... எந்த நிறுவனம் டாப்?

புதிய எஞ்சின்

Yamaha RX 100 பைக் 1985ஆம் ஆண்டு அறிமுகமானது. சாகசத்திற்கு பெயர் போன இந்த பைக்கின் எடை என்பது மிக குறைவானது. சக்திவாய்ந்த எஞ்சினும், தோற்றமும் இளைஞர்களை அப்படியே கவரக்கூடியது. இருப்பினும், இந்த பைக்கின் தயாரிப்புக்கு 2019ஆம் ஆண்டில் தடை விதிக்கப்பட்டதால், அது பைக் பிரியர்களிடம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அந்த வகையில் தற்போது மீண்டும் அந்த பைக் சந்தைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. 

தற்போதைய பைக் விரும்பிகளுக்கு ஏற்றவாறும், அதன் பழைய கெத்தான விஷயங்களை அப்படியே கொண்டுவரும்படியும் இந்த புதிய தயாரிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. பழைய RX100 98cc எஞ்சின் கொண்டது. இந்த புதிய பைக்கின் சக்திவாய்ந்த எஞ்சின் 250cc ஆகும். 

டிஜிட்டல் தொழில்நுட்பம்

இதனால், அதிவேகமாக செல்லவும் உங்களின் பயண அனுபவத்தையும் மேருகேத்தவும் உதவும். இந்த பைக்கில் அனலாக் அம்சங்கள் அடியோடு நீக்கப்பட்டு, டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், எரிபொருள் குறியீடு, வழிசொல்லும் அமைப்பு, கடிகாரம், ட்ரிப் மீட்டர் உள்ளிட்ட பல அம்சங்கள் டிஜிட்டல் இன்ஸ்ரூமென்ட் கிளஸ்டரில் இடம்பிடிக்கும் என கூறப்படுகிறது.

அதேபோல், GPS அமைப்பு, புளூடுத் இணைப்பு ஆகியவையும் இந்த பைக்கில் இடம்பெறும் என கூறப்படுகிறது. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், ABS அமைப்பு ஆகியவையும் இடம்பெறுகிறது. மேலும் டியூப்லெஸ் டயர்கள் உடன் வர இருக்கிறது. இது உங்கள் டயர் அடிக்கடி பஞ்சராவதை தடுக்கும், ஆஃப் ரோடுக்கும் ஏற்றதாக இருக்கும். பஞ்சரை எளிதாகவும் சரிசெய்ய இது உதவிகரமாக இருக்கும். இந்த புதிய Yamaha RX 100 பைக்கின் விலை ரூ.1 லட்சம் ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.  

மேலும் படிக்க | குறைந்த EMI மூலம் கார் வாங்கணுமா... இந்த 5 மாடல்கள் ஈஸியாக கிடைக்கும் - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News