சென்னை: தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (National Eligibility cum Entrance Exam) இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக் கோரி இன்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இந்த கூட்டத்தை நடத்துகிறார்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுக்காக அனுப்பவில்லை என்பதன் பின்னணியில் இந்த கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மருத்துவத்திற்கு முந்தைய நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி (NEET Preparation) பணக்கார மாணவர்களுக்கு பயனளிக்கிறது, ஏழை மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர் என்பதே தமிழக அரசியல் கட்சிகளில் பெரும்பாலானவற்றின் கருத்தாக இருக்கிறது.
ALSO READ | நீட் தமிழகத்திற்கு அவசியம் - அண்ணாமலை
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நீட் தொடர்பாக தங்கள் தரப்பை எடுத்துரைக்க தமிழகத்தின் அனைத்து கட்சிகளின் சார்பில் நேரம் கேட்டதற்கு, இதுவரை அதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தமிழக முதலமைச்சர் குற்றம் சாட்டியிருந்தார்.
2017 ஆம் ஆண்டு முதல் தென் மாநிலங்களிலும் நீட் தேர்வு நடத்தலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தமிழக அரசியல் கட்சிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
தமிழகத்தில் முந்தைய அதிமுக ஆட்சியில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரிய, 2017-ம் ஆண்டு மசோதா (Neet Exeption), குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது.
ALSO READ | இளம் மருத்துவர்களை பந்தாடாதீர்கள் - உச்ச நீதிமன்றம்
தற்போதைய திமுக தலைமையிலான மாநில அரசு, கடந்த செப்டம்பர் மாதம் இளங்கலை மருத்துவ பட்டப்படிப்புகள் மசோதா, 2021 ஐ, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த மசோதாவிற்கு பாரதிய ஜனதா கட்சி (Bharatiya Janata Party) தவிர அனைத்து கட்சிகளும் ஒப்புதல் வழங்கின.
இந்த விவகாரம் தொடர்பான, தமிழக கவர்னர் அலுவலகத்தின் ஆர்டிஐ பதிலில், முதலில் அனுப்பப்பட்ட மசோதா இன்னும் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது என்று தெரியவந்ததையடுத்து, திமுக தலைமையிலான எம்பிக்கள் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை பரிசீலிப்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்து கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி, திமுக தலைமையிலான எம்.பி.க்களின் குழுவினர் குடியரசுத் தலைவர் கோவிந்த் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதற்கான குறிப்பாணை (memorandum) மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் அலுவலகம் தெரிவித்திருந்தது. இந்த மசோதா மீது மத்திய அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதற்கிடையில், புதன்கிழமை மாநில சட்டமன்றத்தில் தனது முதல் உரையின் போது பேசிய தமிழக ஆளுநர் ரவி, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் "கிராமப்புற மாணவர்களுக்கு இயல்பாகவே பாகுபாடு காட்டுவதன் மூலம்" ஒரு "சமமற்ற தளத்தை" உருவாக்குகின்றன என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாததற்காக ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்த நிலையில், இன்று நடைபெறவிருக்கும் அனைத்துக் கட்சி கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
ALSO READ | நீட் தேர்வு நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR