தமிழகத்தில் 71 கல்லூரிகளில் பி.எட். மாணவர்களின் சேர்க்கைக்கு தடை!!

தமிழகத்தில் பல்கலைக்கழக இணைப்பு அனுமதிபெறாத மற்றும் அனுமதி ரத்து செய்யப்பட்ட 71 பி.எட். கல்லூரிகளில் 

Last Updated : Sep 12, 2020, 11:19 AM IST
    1. தமிழகத்தில் பல்கலைக்கழக இணைப்பு அனுமதிபெறாத 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை.
    2. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 56 கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு தடை.
தமிழகத்தில் 71 கல்லூரிகளில் பி.எட். மாணவர்களின் சேர்க்கைக்கு தடை!! title=

தமிழகத்தில் பல்கலைக்கழக இணைப்பு அனுமதிபெறாத மற்றும் அனுமதி ரத்து செய்யப்பட்ட 71 பி.எட். கல்லூரிகளில் 
மாணவர்களை சேர்க்க தடை 

தமிழகத்தில் 71 பி.எட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதித்து ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல்கலைக்கழகம் இணைப்பு அனுமதி பெறாத 13 பி.எட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதித்துள்ளனர். தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தால் அங்கீகாரம் ரத்து செய்த கல்லூரிகளிலும் மாணவர் சேக்கைக்கு தடை விதிப்பு  செய்யப்பட்டுள்ளது. 

ALSO READ | காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிக்குழு உறுப்பினராக தமிழக எம்.பி.யான ஜோதிமணி நியமனம்!!

இது குறித்து அப்பல்கலை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பல்கலை இணைப்பு அனுமதி பெறாத 13 கல்லூரிகளிலும், தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தால் அங்கீகாரம் ரத்து செய்த 58 கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதிக்கப்படுகிறது. இக்கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு பல்கலை பொறுப்பேற்காது. இவ்வாறு அந்த அறிக்கையில் தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை தெரிவித்துள்ளது.

Trending News