திமுக வஞ்சகத்தால் தேர்தலில் வெற்றி பெற நினைக்கிறது: பாஜக வேட்பாளர் குஷ்பு சுந்தர்

திமுகவைச் சேர்ந்தவர்கள் வாக்காளர்களுக்கு பணத்தை விநியோகிப்பதைக் கண்டோம். நாங்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். 

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 6, 2021, 11:18 AM IST
திமுக வஞ்சகத்தால் தேர்தலில் வெற்றி பெற நினைக்கிறது: பாஜக வேட்பாளர் குஷ்பு சுந்தர் title=

சென்னை: இன்று ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கின்றன. தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாகவும், அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் நடக்கின்றன. இதில் புதுச்சேரி ஒரு யூனியன் பிரதேசமாகும். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு (TN Assembly Polls 2021) தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் காலை 9 மணி வரை 13.80 சதவீத வாக்கு பதிவாகி உள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பல பிரபலங்கள் தங்கள் ஓட்டை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை குஷ்பு (Khushbu Sundar) தனது வாக்கை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில்,  திமுகவைச் சேர்ந்தவர்கள் வாக்காளர்களுக்கு பணத்தை விநியோகிப்பதைக் கண்டோம். நாங்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். திமுக வஞ்சகத்தால் வெல்ல விரும்புகிறது என சென்னை ஆயிரம் விளக்குகள் சட்டமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளர் குஷ்பு சுந்தர் தெரிவித்துள்ளார். 

 

ALSO READ | தனது வாக்கைப்பதிவு செய்ய சைக்கிளில் வந்த தளபதி நடிகர் விஜய்!

தமிழக பாஜக தலைவரும், தாராபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான எல். முருகன், தனது வாக்கை சென்னை அண்ணாநகர் தொகுதிக்குட்பட்ட வாக்கு சாவடியில் செலுத்தினார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (Edappadi palaniswami) தனது வாக்கை பதிவு செய்தார். சேலம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட சிலுவம்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை செலுத்தினார். வாக்கு செலுத்திய பிறகு, சிரித்த முகத்துடன் தனது விரலை உயர்த்தி காட்டினார்.

 

தமிழகத்தைப் பொறுத்தவரை, மிகப்பெரிய ஆளுமைகளான முன்னாள் முதல்வர்கள் செல்வி ஜெயலலிதாவும், கலைஞர் கருணாநிதியும் இல்லாத முதல் தேர்தல் இது என்பதால், இத்தேர்தல் அதிக அளவு முக்கியத்துவத்தைப் பெறுகிறது. 234 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ள தமிழகத்தில் பெண்கள் (3,19,39,112) ஆண்கள் (3,09,23,651), 7,192 மூன்றாம் பாலின மக்கள் என மொத்தம் 6.28 கோடி வாக்காளர்கள் உள்ளனர். புதுச்சேரியில் 955 பிரதான மற்றும் 606 துணை வாக்குச் சாவடிகள் உட்பட 1,558 வாக்குச் சாவடிகள் 635 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 30 தொகுதிகளுக்கான (Assembly Seats) வாக்குப்பதிவு நடக்கின்றது.

ALSO READ | இன்று நான்கு மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தல் திருவிழா

ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார். சென்னை அழ்வார் பேட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அவரது மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷராஹாசன் ஆகியோர் வாக்களித்தனர். வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தார். 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News