மதுரை: மதுரைக்கும் செட்டிக்குளத்துக்கும் இடையில் நந்தம் சாலையில் கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி நேற்று விழுந்து விபத்துக்கு உள்ளானது.
சுமார் 7 கி.மீ. தொலைவிற்கு ரூ.679.98 கோடியில் கட்டப்பட்டு வரும் இந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்ததில், உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் சிங் என்ற தொழிலாளி ஒருவர் இடிபாடுகளில் சிக்கி பலியானார்.
விபத்து நடந்த பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்ட மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த விசாரணையை தொடங்கியுள்ளது என்றும் விசாரணை முடிவடையும் வரை பாலத்தின் பணிகள் நடைபெறாது என்றும் கூறினார்.
இதற்கிடையில், மேம்பால பணிகளில் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து காவல்துறையினர் (TN Police) வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த மேம்பால பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் திட்ட பொறுப்பாளர் உட்பட மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ALSO READ:மதுரையில் பாலம் கட்டுமானப் பணி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
மேம்பால கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களை உரிய பாதுகாப்பில்லாமல் பயன்படுத்தியது, விபத்தினால் உயிரிழப்பு ஏற்பட காரணமாக இருந்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுமட்டுமின்றி, கட்டுமானப் பணிகளுக்காக ஹைட்ராலிக் இயந்திரங்களை வழங்கிய நிறுவனத்தின் பொறுப்பாளரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, நேற்று மாலை, தொழில்நுட்பக் கோளாறால் இரு தூன்களுக்கு இடைப்பட்ட 35 மீட்டர் நீளமுள்ள காங்கீரிட் கர்டர் கீழே சரிந்து விழுந்தது. இதில் பல நூறு டன் எடை கொண்ட அந்த காங்கீரிட் கர்டர் இரண்டாக உடைந்து பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. கான்க்கீரிட் கர்டர் இடிந்து விழுவதை முன்கூட்டியே கவனித்த தொழிலாளர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். துரதிஷ்டவசமாக சில தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்பு குழுவினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் ஒருவர் இறந்துவிட்டார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR