'நாட்டுக்காக மகனை ஒப்புக்கொடுத்துவிட்டேன்' - சந்திரயான்-3 வீரமுத்துவேலின் தந்தை பெருமிதம்!

Chandraayan-3 Project Director Veeramuthuvel: சந்திரயான் - 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று மாலை நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சரித்திரம் படைத்துள்ள நிலையில், அந்த திட்டத்தின் மூளையாக திகழ்ந்த விழுப்புரத்தை சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்துவேலின் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Written by - Sudharsan G | Last Updated : Aug 24, 2023, 06:31 AM IST
  • வீரமுத்துவேல், விழுப்புரம் ரயில்வே பள்ளியில் தனது ஆரம்பகால படிப்பை முடித்தார்.
  • சென்னை, திருச்சியில் மேற்படிப்புகளை முடித்தார்.
  • இவருக்கு 2019ஆம் ஆண்டு சந்திரயான்-3 திட்ட இயக்குநர் பொறுப்பு அளிக்கப்பட்டது.
'நாட்டுக்காக மகனை ஒப்புக்கொடுத்துவிட்டேன்' - சந்திரயான்-3 வீரமுத்துவேலின் தந்தை பெருமிதம்! title=

Chandraayan-3 Project Director Veeramuthuvel: நிலவின் தென் துருவம் என்பதை மிக முக்கிய பகுதியாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். நிலவின் இப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உலக நாடுகள் முயற்சி செய்துவரும் நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் உலகமே உற்றுநோக்கும் தருணமாக சந்திரயான் - 3 நிலவின் தென் துருவத்தில் நேற்று தரையிறங்கியது,

இந்த திட்டத்தின் இயக்குநராக பணியாற்றியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமுத்துவேல் ஆவார். இவர் விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து படித்து இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றுகிறார். சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநராக 2019ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி விழுப்புரத்தை சேர்ந்த வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டார். 

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான பழனிவேலின் மகனான வீரமுத்துவேல் 1978ஆம் ஆண்டு பிறந்தவர். விழுப்புரம் ரயில்வே பள்ளியில் தனது ஆரம்பகால படிப்பை முடித்தார். பின்னர் பாலிடெக்னிக்கில் பயின்று சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றார். திருச்சி REC கல்லூரியில் பொறியியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார். 2004ஆம் ஆண்டு முதல் இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். 

மேலும் படிக்க | சந்திரயான்-3 இலக்கை அடைந்தது, இஸ்ரோ சரித்திரம் படைத்தது

இந்நிலையில் சந்திராயன் மூன்று வெற்றிகரமாக  நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியதை கொண்டாடும் வகையில், அவரது தந்தை மற்றும் அவரது உறவினர்கள் விழுப்புரம் வஉசி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் அக்கம் பக்கத்தினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

பெயருக்கு ஏற்ற செயல்...!

தொடர்ந்து பேசிய அவரின் வீரமுத்துவேலின் தந்தை,"சந்திரயான்-3 திட்டம் எனது மகனுக்கு கொடுக்கப்பட்டதில் இருந்து அவர் மிகவும் கடினமாக உழைத்தார். அவர் வீட்டிற்கு கூட வரமால் இதற்காக பணியாற்றினார். நிலவின் தென் துருவத்தில் அனுப்பி இந்தியா வெற்றி கண்டுள்ளது, இந்தியா வல்லரசு நாடாட மாறக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். சந்திரயான்-3 வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி கூட வேண்டும்.

விடாமுயற்சியுடன் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய எனது மகனுக்கு வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் பெயரை போலவே பெரும் வீரத்துடன் செயல்பட்டுள்ளார். இது இந்தியாவுக்கு, தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் பெரும் புகழை சேர்த்துள்ளது. தற்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். அவர் இந்த திட்டத்திற்கு பொறுப்பேற்றதில் இருந்து வீட்டிற்கும் வருவதில்லை, என்னிடமும் சரியாக பேசியதில்லை. மேலும், இந்தியாவுக்காகவே எனது மகனை ஒப்புக்கொடுத்துவிட்டேன்"  என அவர் பேசினார். 

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விஞ்ஞானி வீரமுத்துவேலை தொலைப்பேசியின் வாயிலாக தொடர்புகொண்டு, சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதற்கு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார். 

சந்திரயான் திட்டம்

முன்னதாக, இந்திய நேரப்படி நேற்று மாலை சரியாக 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 நேர்த்தியான தரையிறக்கத்தை கண்டது. இதன்மூலம், நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையையும், ஒட்டுமொத்தமாக நிலவில் கால் பதித்த நான்காவது நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றிருக்கிறது. இதற்கு முன், அமெரிக்கா, சோவியட் யூனியன், சீனா ஆகிய நாடுகள் தான் நிலவில் கால் பதித்துள்ளன. 

இஸ்ரோவின் நிலவு ஆராய்ச்சி பயணத்திட்டமாக சந்திரயான் தொடங்கப்பட்டது. சந்திரயான் -1 திட்டம் அதன் இலக்கை அடைந்து வெற்றிக்கண்டது. அதன்மூலம், நிலவில் நீருக்கான சாத்தியக்கூறுகள் உறுதிசெய்யப்பட்டன. மேலும், விண்வெளி ஆராய்ச்சித் துறையில் அது பெரும் பங்கை ஆற்றியது. 2008-2009 ஆகிய ஆண்டுகளில் சந்திரயான்-1 விண்கலம் செயல்பட்டது. 

தொடர்ந்து, சந்திரயான்-2 நிலவில் தரையிறங்குவது நோக்கமாக கொண்டு 2019இல் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால், தரையிறக்கம் சரியாக இல்லாமல், அத்திட்டம் அதன் இலக்கை நிறைவு செய்யவில்லை. இந்தியாவின் நிலவு ஆராய்ச்சி பயணத்தில் இது சற்று பின்னடைவு ஏற்படுத்தியிருந்தாலும், அடுத்த நான்கே ஆண்டுகளில் அதில் இருந்து பெரும் பாடத்தை கற்றுக்கொண்டு, சந்திரயான்-3 விண்கலம் முலம் பெரும் சாதனையை இஸ்ரோ படைத்துள்ளது. தற்போது, விக்ரம் லேண்டரில் இருந்து நேற்றிரவு பிரக்யான் ரோவர் (ஊர்தி) நிலவில் இறக்கப்பட்டது. பிரக்யான் ஊர்தி இனி அதன் ஆய்வுகளை மேற்கொள்ளும். பிரக்யான் ரோவர் அடுத்த 14 நாட்கள் நிலவில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

மேலும் படிக்க | நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடாக மாறியது இந்தியா..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News