புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த நடிகர் மன்சூர் அலிகான் வீட்டிற்கு சீல்!

சென்னையில் 2500 சதுர அடி அரசு புறம்போக்கு நிலத்தை அபகரித்து நடிகர் மன்சூர் அலிகான் கட்டிய வீடு சீல் வைக்கப்பட்டது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 23, 2021, 12:28 PM IST
  • நடிகர் மன்சூர் அலிகானின் வீடு சீல்
  • புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டியதாக புகார்
  • மன்சூரின் சென்னை வீடு 2500 சதுர அடி புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ளது
புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த நடிகர் மன்சூர் அலிகான் வீட்டிற்கு சீல்! title=

சென்னை: தென்னிந்திய சினிமாவின் பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான், சென்னையில் புறம்போக்கு நிலத்தை ஆக்ரமித்து வீடு கட்டிய விவகாரத்தில், அவரது வீட்டுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சுமார் 2500 சதுர அடி அரசு புறம்போக்கு நிலத்தை அபகரித்து நடிகர் மன்சூர் அலிகான் வீடு கட்டியதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. சூளைமேடு, பெரியார் பாதையில் 2500 சதுர அடி புறம்போக்கு நிலத்தை அபகரித்து வீடு கட்டிய மன்சூர் அலிகானின் வீடு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவரான மன்சூர் அலிகான், ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார். சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும், மன்சூர் அலிகான் என்றாலே வில்லன் நடிகர் என்று தான் அனைவரும் புரிந்துக் கொள்வார்கள்.

ALSO READ |  14 ஆண்டுகளாக பாலியல் தொல்லை - மூன்று குழந்தைகளுக்கு தாயான பெண்

நடிகராக மட்டுமல்ல, பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளார், மேலும் சில திரைப்படங்களை இயக்கியுள்ளார் மன்சூர் அலிகான். நாம் தமிழர் கட்சியில் இணைந்து கடந்த மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்த பிறகு, கட்சியிலிருந்து விலகிய மன்சூர் அலிகான், தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற ஒரு கட்சியைத் தொடங்கி, கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெறும் 41 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார்.

மன்சூர் அலிகான் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை என்ற அளவுக்கு பல விவகாரங்களை செய்துள்ளார் இந்த பிரபல நடிகர். கொரோனா தடுப்பு மருந்து குறித்து அவதூறு பரப்பியதற்காகவும், நடிகர் விவேக் மரணம் குறித்து திரித்து சொன்னதாகவும் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

கொரோனா என்பது இல்லை என்றும், இல்லாத ஒன்றை இருப்பதாக மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பொய் சொல்லி வருவதாக மன்சூர் வெளியிட்ட சர்ச்சைக் கருத்துக்களால் வழக்குகளை எதிர்கொண்டார். இந்த வழக்கில் அவர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தபோது, கொரோனா தடுப்பூசி தொடர்பான எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்க கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டாலும், அவருக்கு 2 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

Also Read | இந்திய மீனவர்களை இலங்கை எப்போது திருப்பி அனுப்பும்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News