கடந்தாண்டு பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்... தற்போதைய நிலை என்ன?

TN Budget 2024: கடந்தாண்டு 2023-2024 நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களின் தற்போதைய நிலை என்ன என்பதை இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 19, 2024, 09:00 AM IST
  • கடந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை நிகழ்த்தினார்.
  • கோவை, மதுரை மெட்ரோ குறித்த அறிவிப்புகள் கடந்தாண்டு வெளியாகின.
  • மாபெரும் 7 தமிழ் கனவுகள் என தலைப்பில் புதிய அறிவிப்புகள் இன்று வெளியாகும்.
கடந்தாண்டு பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்... தற்போதைய நிலை என்ன? title=

TN Budget 2024: தமிழ்நாடு அரசு 2024-25 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (TN Budget 2024) சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்ய உள்ளது. தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது முதல் பட்ஜெட் உரையை இன்று தாக்கல் செய்ய உள்ளார். தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அறிவிப்பு  குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் மக்களிடையே உள்ளது.

மழை வெள்ள பாதிப்பால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், பட்ஜெட்டில் அதுசார்ந்த அறிவிப்புகள், திட்டங்கள் கொண்டுவரப்படும் என பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. தொடர்ந்து மெட்ரோ உள்ளிட்ட உட்கட்டமைப்பு சார்ந்த திட்டங்களும் இன்று அறிவிக்கப்படலாம். தொடர்ந்து, "தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கி" எனற பெயரில் தமிழ்நாடு பட்ஜெட் அறிவிக்கப்பட உள்ளது. 

மேலும், சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல்வாழ்வு, உலகை வெல்லும் இணைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கி மகளிர் நலன், பசுமை வழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய தலைப்புகளின் "மாபெரும் 7 தமிழ் கனவுகள்" என தமிழ்நாடு அரசு பல புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், எதிர்பார்ப்புகளும் எகிறியுள்ளது.  

மேலும் படிக்க | தமிழ்நாடு பட்ஜெட் 2024: புதிய அறிவிப்புகள் என்ன? முக்கிய அம்சங்கள் என்னென்ன?

இந்நிலையில், இந்தாண்டு வரும் புதிய திட்டங்களை விட கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தற்போது என்ன நிலையில் உள்ளது என்பதை தெரிந்துகொள்வதும் அவசியமாகிறது. 1 இடைக்கால பட்ஜெட், இரண்டு முழு பட்ஜெட் என மூன்று பட்ஜெட்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இதுவரை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது. அதில் கடந்தாண்டு 2023-2024 நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களின் தற்போதைய நிலை என்ன என்பதை இதில் காணலாம்.  

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்

திமுக தனது தேர்தல் அறிக்கையில், மகளிருக்கு மாதாமாதம் ரூ.1000 வழங்குவோம் என அறிவித்திருந்த நிலையில், அதற்கான நிதியை கடந்தாண்டு பட்ஜெட்டில்தான் அரசு ஒதுக்கியது. தொடர்ந்து, அதற்கான பயனாளிகள் யார், எப்போது அமல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முன்னாள் நிதி அமைச்சரும், தற்போதைய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். 

அதன்படி, பல்வேறு கட்டங்களாக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு கடந்த செப். 15ஆம் தேதி அன்று இத்திட்டம் அமல்படுத்தப்பபட்டது. தற்போது வரை இந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டு 1.15 பயனாளிகளுக்கு மாதாமாதம் அவரவர் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.1000 செலுத்தப்படுகிறது. 

கோவை, மதுரை - மெட்ரோ

சென்னையை போன்று கோவை மெட்ரோ ரயில் திட்டம் சுமார் 9 ஆயிரம் கோடி செலவில் கொண்டுவரப்படும் என தமிழ்நாடு அரசு கடந்த பட்ஜெட்டில் அறிவித்தது. அதன்படி தற்போது விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report - DPR) மட்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு, இடங்களை தேர்வு குறித்த அறிவிப்புகள் இன்று வெளியாகலாம். மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திலும், விரிவான திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. 

4 வழி மேம்பாலம்

சென்னை அண்ணா சாலையில், தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை 4 வழி மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசு ஆணை வெளிட்டது. 

விளையாட்டு நகரம்

சென்னையில் அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது. அந்த திட்டத்தில், தற்போது வரை செங்கல்பட்டு அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை (DPR) சமர்பிக்கப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் வனவிலங்கு சரணலாயம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணலாயம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 80 ஆயிரம் ஹெக்டர் மேற்பட்ட வனப்பகுதிகள் வனவிலங்கு சரணலயமாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் சில வாரங்களுக்கு முன் அரசாணை மட்டும் வெயிடப்பட்டது.

மேலும் படிக்க | இன்று தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்: எதிர்பார்ப்புகள் என்னென்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News