Tamil Nadu State Assembly Budget Session 2024 2025 LIVE Updates in Tamil: முதலமைச்சர் தலைமையிலான மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இன்னும் சில மாதங்களில் மூன்றாண்டுகள் நிறைவு பெற உள்ளது. அதுமட்டுமின்றி, வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.
அந்த வகையில், தமிழ்நாடு அரசின் 2024-2025 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை (TN Budget 2024) சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. திமுக அரசின் எதிர்கால திட்டங்கள், கடந்த காலங்களில் அமல்படுத்தப்பட்ட திட்டங்களின் மீதான செயல்பாடு ஆகியவை குறித்து இன்றைய பட்ஜெட் உரையில் அறிவிப்புகள் இருக்கும். மேலும், மக்களவை தேர்தலில் திமுக எதிர்க்கட்சி கூட்டணியில் இருக்கும் நிலையில், தேர்தலை மனதில் வைத்து ஏதேனும் அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே உள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த பிப். 12ஆம் தேதி ஆளுநர் உரை நிகழ்வுடன் தொடங்கியது. தொடர்ந்து ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில், இன்று (பிப். 19) சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழ்நாட்டின் நிதி அமைச்சரான தங்கம் தென்னரசு தனது முதல் பட்ஜெட் உரையை இன்று தாக்கல் செய்கிறார். சட்டப்பேரவையில் இன்று 10 மணிக்கு பட்ஜெட் உரை தொடங்கும். தமிழ்நாடு பட்ஜெட் குறித்த அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் தொடரவும்...