தனியார் சொகுசு ஓட்டல் அதிபரை கடத்திய கும்பல் போலீசில் சிக்கியது எப்படி ?

தனியார் சொகுசு ஓட்டல் அதிபரை கடத்திய கூலிப்படை கும்பல். 24 மணி நேரத்தில் தொழிலதிபரை மீட்டு 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

Written by - Gowtham Natarajan | Last Updated : Apr 25, 2022, 05:10 PM IST
  • தனியார் சொகுசு ஓட்டல் அதிபர் கடத்தல்
  • கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் கைது
  • 24 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் அதிரடி
தனியார் சொகுசு ஓட்டல் அதிபரை கடத்திய கும்பல் போலீசில் சிக்கியது எப்படி ?   title=

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கொடைக்கானல் செல்லும் வழியில் தனியார் 3 ஸ்டார் ஹோட்டல் இயங்கி வந்தது. கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த ஹோட்டலுக்கு வந்து செல்வதால் இங்கு எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். இந்நிலையில், ஹோட்டல் உரிமையாளர் அன்பு மர்ம நபர்களால் திடீரென்று கடத்தப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை தொடங்கினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. 

ஓட்டல் அதிபர் கடத்தல்

ஹோட்டல் தொடர்பாக ஹோட்டல் உரிமையாளர் அன்பு என்பவருக்கும் அவரது நெருங்கிய உறவினரான அருள்நாயகம் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதனால் கடந்த சில நாட்களாகவே இந்த ஹோட்டல் செயல்படாமல் இருந்தது. இதில் அன்புவை பழிவாங்க நினைத்த அருள்நாயகம் அதற்காக வெள்ளைச்சாமி,சிவா ஆகிய இருவரின் உதவியை நாடியிருக்கிறார். இருவரும் கூலிப்படையை சேர்ந்தவர்கள். மூவரும் சேர்ந்து கடந்த 10 நாட்களாக வத்தலக்குண்டு நகரில் தங்கியிருந்து அன்புவை கடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். 

ஓட்டல் அதிபர் கடத்தல்

இதனையடுத்து சம்பவத்தன்று, காலை வத்தலகுண்டு- பெரியகுளம் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்ட அன்புவை காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்தது. சுதாரிப்பதற்குள் நொடிப்பொழுதில் அன்புவை காரில் கடத்தி சென்றனர். இதற்கிடையே, நீண்ட நேரமாகியும் அன்பு வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த அவரின் மகன் பல இடங்களில் தேடியும் அவர் குறித்த தகவல்கள் கிடைக்காமல் போனது. அப்போது அன்புவின் செல்போனில் இருந்து மகன் கிஷோருக்கு அழைப்பு வந்தது. தன்னை கடத்திவிட்டதாக மகனிடம் தெரியப்படுத்தியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த கிஷோர் உடனே இதுகுறித்து போலீசில் புகாரளித்தார். வழக்குபதிவு செய்து தனிப்படை அமைத்தனர். அன்பு நடைபயிற்சி மேற்கொண்ட சாலையில் வைக்கப்பட்ட சிசிடிவி கேமிராக்களின் காட்சிகள், அக்கம்பக்கத்தினர் கொடுக்கும் தகவல்கள்,செல்போன் சிக்னல்கள் என ஒன்றையும் விட்டுவைக்கவில்லை. சல்லடை போட்டு தேடியதில் இறுதியாக கடத்தல் கும்பல் இருக்கும் இடம் போலீசாருக்கு தெரியவந்தது. 

ஓட்டல் அதிபர் கடத்தல்

அதிரடி படையோடு புறப்பட்டு சென்ற போலீசார், அன்புவை பத்திரமாக மீட்டனர். அவரை கடத்தி சென்ற அருள்நாயகம், விஜய், வடிவேல், பிரபாகரன் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் காவல்நிலையம் அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில் ஹோட்டலை உரிமம் கொண்டாட ஆசப்பட்ட அருள்நாயகம் கூலிப்படையை வைத்து கடத்தலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.

ஓட்டல் அதிபர் கடத்தல்

மேலும் படிக்க | நில அபகரிப்பு வழக்கில் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமென ஜெயக்குமாருக்கு உத்தரவு

மேலும், கடத்தப்பட்டு 24 மணி நேரத்தில் காவல்துறையினர் கடத்தப்பட்ட நபரை மீட்டதோடு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். ஹோட்டலை நடத்துவது யார் என்கிற பிரச்சனையில் உறவினரை  கூலிப்படை வைத்து கடத்திய சம்பவம் வத்தலகுண்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | போலீஸ் தாக்கியதால் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்துகொண்டதாக புகார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News