வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக ஆர்ப்பாட்டம்; விவசாயியாக மாறிய மு.க. ஸ்டாலின்!!

சர்ச்சைக்குரிய வேளாண்மை மசோதாக்களுக்கு எதிரான போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளன. நாடு முழுவதும் பல மாநிலங்களில் வெடித்தது போராட்டம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 28, 2020, 12:24 PM IST
  • நாடு முழுவதும் பல மாநிலங்களில் வேளாண்மை மசோதாக்களுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
  • தமிழகம் முழுவதும் 3,500 இடங்களில் திமுக போராட்டம் நடத்தி வருவதாக கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
  • விவசாய மசோதா தொடர்பாக நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்ல தயாராக இருக்கிறோம்: ஸ்டாலின்
வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக ஆர்ப்பாட்டம்; விவசாயியாக மாறிய மு.க. ஸ்டாலின்!! title=

DMK Protest against farm bills: கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய வேளாண்மை மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாட்டில் திமுக மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தி வருகிறது. காஞ்சிபுரத்தின் கீழம்பி கிராமத்தில் விவசாயிகளுடன் சேர்ந்து விவசாய சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் (Dravida Munnetra Kazhagam) தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்துள்ளார். இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் 3,500 இடங்களில் திமுக நடத்தி வருவதாக கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். "விவசாய மசோதா (Farm Bills) தொடர்பாக நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்ல தயாராக இருக்கிறோம் என்றும் மு.க. ஸ்டாலின் (M.K. Stalin) கூறினார்.

அதேபோல கர்நாடகாவில் (Karnataka) உழவர் அமைப்புகள் இன்று மாநிலம் முழுவதும் காலை முதல் மாலை வரை வேலைநிறுத்தம் போராட்டம் நடத்தி வருகின்றன. தொழிலாளர் அமைப்புகள், கன்னட அமைப்புகள், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (மதச்சார்பற்ற) போன்ற அரசியல் கட்சிகள் பந்த் அழைப்புக்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன.

 

பஞ்சாபிலும் (Farmers protest in Punjab) சர்ச்சைக்குரிய மசோதாக்களுக்கு எதிரான போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளன. புதிய சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்புகள் கடந்த வெள்ளிக்கிழமை பாரத் பந்த் போராட்டத்தை நடத்டிய இரண்டு நாட்களுக்குப் பின்னர் நாடு முழுவதும் பரவலாக போராட்டங்கள் வெடித்துள்ளது.

ALSO READ | விவசாய மசோதா விவகாரத்தில் தொடர்பாக NDAவில் இருந்து விலகியது சிரோமணி அகாலி தளம்

விவசாய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி (New Delhi) இந்தியா கேட் அருகே டிராக்டருக்கு தீ வைக்கப்பட்டது . இந்த சம்பவம் காலை 7:42 மணிக்கு நடந்துள்ளது. டெல்லி போலீசார் கூற்றுப்படி, 15-20 பேர் கொண்ட குழு ஒரு டிராக்டருடன் மான்சிங் சாலைக்கு வந்து விவசாய மசோதாவுக்கு எதிராக முழக்கமிட்டது. திடீரென டிராக்டருக்கு தீ வைக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து மூத்த அதிகாரிகளும் இப்பகுதிக்கு வந்தனர். போராட்டக்காரர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என்று புது டில்லி டி.சி.பி ஈஷ் சிங்கால் கூறினார்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News