முதல்வர் இல்லாத நேரத்தில் வேண்டுமென்றே நடத்தப்படும் ரெய்டு இது-ஆர்.எஸ் பாரதி

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். இதுகுறித்த தனது கருத்தினை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்தார்.  

Written by - Yuvashree | Last Updated : May 26, 2023, 04:18 PM IST
  • செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை.
  • ஆர்.எஸ் பாரதி பத்திரிகையாளர்கள் சந்திப்பு.
  • முதல்வர் இல்லாத நேரத்தில் வேண்டுமென்றே ரெய்டு நடத்தப்படுவதாக பேச்சு.
முதல்வர் இல்லாத நேரத்தில் வேண்டுமென்றே நடத்தப்படும் ரெய்டு இது-ஆர்.எஸ் பாரதி  title=

தமிழ்நாடு மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து, திமுக தொண்டர்கள் பலர் சோனை நடத்தப்படும் இடங்களில் குவிந்துள்ளனர். திமுக கட்சியின் அமைப்பு செயலாளரான ஆர்.எஸ் பாரதி ஐடி ரெய்டு குறித்து இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியுள்ளார். 

ஆர்.எஸ் பாரதி பத்திரிகையாளர் சந்திப்பு:

திமுக-வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, இன்று தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வருமான வரித்துறையினரின் சோதனைக்கு மாநில காவல்துறையை அழைத்துச் செல்வது தான் வழக்கம். ஆனால் திட்டமிட்டு மாநில காவல்துறையை அழைத்துச் செல்லாமல் செல்கிறார்கள். இதன் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த முயல்கிறார்கள்” என்று கூறினார்.  

மேலும் படிக்க | தமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? அமைச்சர் சொன்ன தகவல்!

“Man of The match மு.க.ஸ்டாலின்தான்..”
 
தொடர்ந்து பேசிய  ஆர்.எஸ்.பாரதி, “போர்க்களத்தில் குதிரைப்படை,  காலப்படை ஆகியவற்றை எப்படி வைத்திருப்பார்களோ அதைப் போல ஒன்றிய பாஜக அரசு சிபிஐ, ஐடி போன்ற துறைகளை வைத்திருக்கிறார்கள்” என்றார். மேலும், கர்நாடக தேர்தலில் ரோட் ஷோ நடத்தி என்னென்னமோ நாடகம் ஆடியும் பணத்தை குவித்தும் தோல்வி அடைந்து விட்டதாகவும்,
பாஜகவினர் தான் கர்நாடக தேர்தலில் 2000 ரூ நோட்களை அதிகம் பயன்படுத்தினார்கள் என்றும் கூறினார். தமிழகத்தில் வரும் 2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் Man of The match ஆக மு.க.ஸ்டாலின்தான் இருப்பார் எனவும் அவர் கூறினார். 

“திசைதிருப்பும் நோக்கில் நடக்கும் ரெய்டு..”

ஆர்.எஸ் பாரதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்தும் பேசினார். அப்போது, “முதலீடுகளை ஈர்க்க எங்கள் முதல்வர் வெளிநாடு சென்றுள்ள நேரத்தில் அதுகுறித்து பத்திரிக்கையில் தினமும் செய்தி வருவதை திசை திருப்பும் நோக்கில் இன்று ரெய்டு நடத்துகிறார்கள்” என்று கூறினார்.  

மேலும், இன்று நடத்தப்படம் ரெய்டு வேண்டுமென்றே நடத்தப்படுவதாகவும் இது போன்ற பல ரெய்டுகளை பார்த்து முறியடித்து வளர்ந்தவர்கள் நாங்கள் என்றும் அவர் கூறினார். 

அண்ணாமலை குறித்து ஆர்.எஸ்.பாரதி:

ஆர்.எஸ் பாரதி அண்ணாமலை குறித்தும் பேசினார். அப்போது, கர்நாடக தேர்தலில் தோல்வியடைந்ததற்கு பின் பாஜகவில் பலத்தை காட்டுவோம் என அண்ணாமலை கூறியதாகவும் இப்போது அண்ணாமலை திட்டமிட்டு செந்தில் பாலாஜியை டார்கெட் செய்வதாகவும் இது பாஜகவின் கேவலமான அரசியல் என்றும் அவர் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், “ரெய்டுக்கு மாநில காவல்துறையை அழைத்துச் செல்வது தான் வழக்கம். ஆனால் திட்டமிட்டு மாநில அழைத்துச் செல்லாமல் செல்கிறார்கள். திடீரென யாரோ ஒருவர் வந்து ஐடி ரெய்ட் என்று சொன்னால் திருடனா,  கொள்ளைக்காரனா என்று யாருக்குத் தெரியும். பாதுகாப்பிற்காக எதாவது தடுத்திருப்பார்கள்.எனக்கு தெரிந்தவுடன் திமுகவினர் யாரும் அங்கு பிரச்சனை செய்யக் கூடாது என செந்தில் பாலாஜிடம் தெரிவித்தேன்” என்று கூறினார். 

“எங்களுக்கு கவலையில்லை..”

ஆர்.எஸ் பாரதி ஒரு பஞ்சாயத்துத் தலைவரை திடீரென கைது செய்தால் கூட அவர் மீது அபிமானம் கொண்டோர் கோபப்படுவது இயல்புதான் என்றும் வேண்டுமென்றே இந்த விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த சிலர் முயல்வததகவும் கூறினார். “சட்ட ரீதியாக என்ன செய்கிறார்களோ,  அதை செய்யட்டும். எங்களுக்கு கவலையில்லை. திட்டமிட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துவதற்காகவே இந்த ரெய்டு” என்றும் அவர் கூறினார். 

அந்த செயல் தவறுதான்..

செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனைக்கு வந்தபோது, சில திமுக தொண்டர்கள் அதிகாரிகளின் கார் கண்ணாடிகளை உடைத்தனர். இது குறித்த தனது கருத்தினை கூறிய ஆர்.எஸ் பாரதி, “ரெய்டுக்கு வந்தவர்களின் வாகனங்களை உடைத்தது தவறு தான். நான் சரியென்று சொல்லவில்லை. யார் என்னவென்று தெரியாமல் அச்சத்தில் செய்திருக்கிறார்கள். திமுகவினர் இந்த செயலை செய்திருந்தாலும் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். 

மேலும் படிக்க | விஷச் சாராய உயிரிழப்பில் அடுத்தடுத்து திருப்பம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News