6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் ஒன்றாம் தேதியும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜூன் 5ஆம் தேதியும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை வெயில் ஆனது சுட்டு எரிந்து வருகிறது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். நேற்று திருச்சியில் நடைபெற்ற மாவட்ட கல்வி அலுவலர்களின் ஆய்வுக் கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்கள் சந்தித்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முதல்வர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ளதால் இன்று அவரை தொடர்பு கொண்டு ஆலோசனை செய்த பின்பு பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது இன்று அறிவிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க | அண்ணாமலை மீது கோவை பாஜக நிர்வாகி பரபரப்பு புகார்..!
கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 9 லட்சத்து 14 ஆயிரத்து 320 மாணவ, மாணவியர் எழுதினர். அந்த வகையில், அவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 19 காலை 10 மணியளவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை டிபிஐ வளாகத்தில் வெளியிட்டார். இதில், தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் 91.39 ஆக பதிவாகியுள்ளது. இது கடந்தாண்டை விட ஒரு சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு 90.07 சதவீதத்தினர் தேர்ச்சியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மாணவியர் 94.66 சதவீதமும், மாணவர்கள் 88.16 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவியர் 6.50 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் 97.67 சதவீத தேர்ச்சியை பெற்று முதலிடத்தை பிடித்தது. சிவகங்கை 97.53 சதவீதத்துடன் இரண்டாமிடமும், விருதுநகர் 96.22 சதவீதத்துடன் மூன்றாமிடமும் பிடித்தது. காரைக்கால் 79.43 சதவீத தேர்ச்சியுடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னையில் 89.14 சதவீதம் தேர்ச்சி விகிதம் பதிவாகி 30ஆவது இடத்தை பிடித்தது.
மேலும் தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்விக்கான உரிமை சட்டத்தின் மூலம் குழுக்கள் நடைபெற்று தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் அந்தந்த பள்ளியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு சேர்க்கப்படும் பள்ளி மாணவர்களின் பெற்றோர் இடத்தில் கூடுதல் மற்றும் தேவையற்ற கட்டணங்களை வசூலிக்கப்பட்டு வருவதாகவும் 6,300 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாகவும், புத்தக கட்டணம் சீருடை கட்டணம் எழுதுபொருள் கட்டணம் என பல்வேறு கட்டணங்கள் வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் மாணவ மாணவர்களின் பெற்றோர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் நேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் பள்ளிகளில் கட்டண கொள்ளை தடுத்திட வேண்டும் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ