நடுரோட்டில் கவிழ்ந்த கான்கிரீட் வாகனம் - 3 பேர் உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே கட்டுப்பாட்டை இழந்து கான்கிரீட் வாகனம் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 01:42 PM IST
  • ஈரோடு அருகே சாலையில் கவிழ்ந்த கான்கிரீன்ட் வாகனம்
  • தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
  • ஓட்டுநர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்
நடுரோட்டில் கவிழ்ந்த கான்கிரீட் வாகனம் - 3 பேர் உயிரிழப்பு title=

சத்தியமங்கலத்தை அடுத்த நஞ்சப்ப கவுண்டன்புதூர் பகுதியில் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக கான்க்ரீட் கலவை ஏற்றிக்கொண்டு வாகனம் ஒன்று சென்றுள்ளது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், நிலைதடுமாறி சாலையின் நடுவே குப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் கருப்பசாமி, பவானி சாகரைச் சேர்ந்த முத்தப்பன், கொத்துக்காடு பகுதியைச் சேர்ந்த சரவணன் வண்டிக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர். 

ALSO READ | இடிந்து விழுந்த ராட்சத பாலம் - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தொழிலாளர்கள்

அப்போது அந்த வழியாக சென்றவர்கள் வாகனத்திற்குள் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வண்டி குப்புற கவிழ்ந்து இருந்தநிலையில், அவர்கள் அடிப்பகுதியில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் மூன்று பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், சாலையின் நடுவே குப்புற கவிழ்ந்திருந்த வண்டியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

ALSO READ | பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டிருந்த பேருந்தில் தீடீர் தீ விபத்து!

மேலும், உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கான்கிரீட் வாகனம் குப்புற கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. கான்கிரீட் வாகனத்தின் உரிமையாளர் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.  

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News