பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டிருந்த பேருந்தில் தீடீர் தீ விபத்து!

புதுச்சேரி அருகே பெட்ரோல் பங்கில் நின்று கொண்டிருந்த பேருந்தில் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 22, 2022, 01:23 PM IST
  • நேற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தின் உள்ளே இருந்து திடிரென தீ பற்றி எரிய துவங்கியது.
  • தீ கட்டுக்குள் வராததை அடுத்து, தீயனைப்பு துறைக்கும் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டிருந்த பேருந்தில் தீடீர் தீ விபத்து!  title=

புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை இந்திரா காந்தி சதுக்கம் அருகே தனியார் பெட்ரோல் பங்க் (Petrol Bunk) செயல்பட்டு வருகிறது.  இந்த பங்கிற்கு சொந்தமாக பேருந்துகளை அருகே உள்ள காலி மனையில் நிறுத்துவது வழக்கம், இந்நிலையில் நேற்று மாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தின் உள்ளே இருந்து திடிரென தீ பற்றி எரிய துவங்கியது. 

ALSO READ | கள்ளக்குறிச்சி முழுவதும் கடுமையான பனிப்பொழிவு!

இதனை கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் பெட்ரோல்  பங்க் ஊழியர்கள் அங்கிருந்த தீயனைப்பான் மற்றும் தண்ணீரை கொண்டு தீயை அனைக்க முயன்றனர். ஆனால் தீ (Fire Accident)கட்டுக்குள் வராததை அடுத்து, உடனடியாக தீயனைப்பு துறைக்கும் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தீயனைப்பு துறையினர் விரைந்து வந்து பேருந்து உள்ளே எறிந்து கொண்டிருந்த தீயை அனைத்தனர். 

bus

இந்த தீ விபத்து குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து யாரேனும் பேருந்தை கொளுத்தி விட்டார்களா அல்லது வயரில் ஏற்ப்பட்ட கசிவினால் தீ விபத்து ஏற்ப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துரிதமாக செயல்பட்டு பெரும் விபத்தினை தடுத்த பொது மக்கள் மற்றும் தீயனைப்பு துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். மேலும் பெட்ரோல் பங்க் அருகே இந்த பேருந்து தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

bus

ALSO READ | உணவு டெலிவரி செய்வது போல் கஞ்சா விற்பனை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News