விஜய்யை எம்ஜிஆர் என்று புகழ்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு!

நடிகர் விஜய் எம்ஜிஆரை போல சம்பாதித்த பணத்தை மாணவர்களுக்கு மக்களுக்கு செலவழிக்க நினைக்கிறார் -  அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புகழாரம்  

Written by - RK Spark | Last Updated : May 12, 2024, 02:29 PM IST
  • உதவியையும், பணத்தையும் தகுதி பார்த்து கொடுக்கிறார்கள்.
  • இந்த ஆட்சியில் சொல்லும்படியாக ஒன்றும் இல்லை.
  • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றசாட்டு.
விஜய்யை எம்ஜிஆர் என்று புகழ்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு! title=

மூன்றாண்டு காலமாக திமுகவின் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு திமுக எதையும் செய்யவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றச்சாட்டு வைத்துள்ளார். மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 70 வது பிறந்த நாளை முன்னிட்டு பட்டாசு வெடித்து 70 கிலோ கேக் வெட்டி, பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்தார் அப்போது அவர் கூறுகையில், திமுக ஆட்சிக்கு வந்தால் எல்லா துறைகளையும் கைப்பற்றுவார்கள். அதைப்போல சினிமாத்துறையையும் கைப்பற்றி உள்ளனர்.

மேலும் படிக்க | மதுரையில் பொளந்தெடுக்கும் கனமழை... சாலையில் தண்ணீர் அதிகமாக தேங்க என்ன காரணம்?

திமுகவின் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு திமுக எதையும் செய்யவில்லை. உதவியையும், பணத்தையும் தகுதி பார்த்து கொடுக்கிறார்கள். இந்த ஆட்சியில் சொல்லும்படியாக ஒன்றும் இல்லை. தமிழகத்தில் இது ஒரு பண்பு. யார் வாழ்த்து சொன்னாலும் எங்களுக்கு மகிழ்ச்சி..சந்தோஷம். திமுக ஆட்சியை எதிர்த்து பேசினால் அடக்குமுறைகளால் அடக்கப்பார்க்கின்றனர். விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும். நடிகர் விஜய் நன்றாக செயல்படக்கூடியவர். அவர் அரசியல் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி. எம்ஜிஆரை போல சம்பாதித்த பணத்தை மாணவர்களுக்கு மக்களுக்கு செலவழிக்க நினைக்கிறார்.

எடப்பாடி பழனிச்சாமியை வாழ்த்துவது அவர்களுக்கும் பெருமை. எங்களுக்கும் பெருமை. அதிமுக  பிளவு பட்டா இருக்கிறது? என்று தொண்டர்களிடம் மறு கேள்வி எழுப்பினர். வேப்பம்பரம் போல் பட்டு போச்சு என்று பிற கட்சிகள் அதிமுகவை நினைத்தார்கள்?  அது ஈடுயேராது, அதிமுக கட்சி பீனிக்ஸ் பறவை போல அழிவது போல தெரியும் ஆனால் வீறு கொண்டு எழும் அதிமுகவை தேடி பெரும்பாலான இளைஞர்கள் வருகிறார்கள் அதிமுக வேடந்தாங்கல் பறவையைப் போல என்றார். 

எடப்பாடி பிறந்தநாள் கொண்டாட்டம்

சீர்காழியில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே பழனிசாமியின் 70 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இன் நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே அதிமுகவினர் பழனிச்சாமி வாழ்க என கோஷங்கள் எழுப்பி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்‌. மேலும் நீர் மோர் தர்பூசணி குளிர்பானங்களை சாலையில் சென்ற பொதுமக்களுக்கும்,பேருந்தில் சென்ற பயணிகளுக்கு அளித்தனர். 

மேலும் சீர்காழி தென்பாதி கதிர்காம பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் சங்கல்பம் அர்ச்சனை செய்து அதிமுகவினர்கள் சிறப்பு வழிபாடு தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்து அதிமுகவினர்கள் தரிசனம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர் இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | சென்னையில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த வாலிபர்கள்! சிறுவன் உள்பட 3 பேர் கைது..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News