கிசுகிசு : பெரிய கவிஞருக்கு எம்எல்ஏ ஆசை வந்துருச்சாமே...! சூரிய கட்சியில் சீட் கிடைக்குமா?

Gossip : ஆஸ்தான பெரிய கவிஞருக்கு எம்எல்ஏ சீட் மேல ஆசை வந்திருக்காம். அடுத்த கோட்டை தேர்தல்ல நண்பர்கிட்ட நேரடியாகவே சீட் கேட்கலாம் என்ற முடிவுல இருக்கிறாராம். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 14, 2024, 03:22 PM IST
  • கோட்டைக்குபோக திட்டம்போடும் கவிஞர்
  • பொறந்தநாள் வாழ்த்து சொல்லாத முதன்மையானவர்
  • தமிழ்நாடு அரசியலில் லேட்டஸ்ட் கிசுகிசு
கிசுகிசு : பெரிய கவிஞருக்கு எம்எல்ஏ ஆசை வந்துருச்சாமே...! சூரிய கட்சியில் சீட் கிடைக்குமா? title=

Political Gossip News Tamil : ஏன்டா குசும்பா.. எங்கடா போன நேற்று கடை பக்கம் ஆளையே காணமே என டீ மாஸ்டர் கேட்க, விருந்து சாப்பிட்ட மெதமெதப்போட இருந்த குசும்பன் ‘அதாண்ணே... இனிப்பு ஈ மாவட்டத்துல கவிஞர் கொடுத்த விருந்த சாப்பிட்டு வர்ற போனேன். விருந்தெல்லாம் தடபுடலா இருந்துச்சுண்ணே’ என்றான். ‘அடப்பாவி, விருந்துண்ணதும் சொல்லாம கொள்ளாம ஓடிப்போயிட்டயே.. ஒருவார்த்தை என்கிட்ட சொல்லியிருக்கலாம்ல, நானும் வந்துருப்பேன். அதுசரி விஷயம் இல்லாம நீ அங்க போகமாட்டீயே, என்ன சமாச்சாராம்?’ என டீ மாஸ்டர் கேட்க, அங்க சேகரிச்ச தகவல்களை எல்லாம் சொல்ல ஆரம்பிச்சான் குசும்பன். ’ அண்ணே, கவிஞரு, இப்ப இங்க மேலிடமா இருக்கிறவங்களுக்கு ஆஸ்தானமானவருன்னு உலகத்துக்கே தெரியும். அவரும் எத்தனை நாளுக்கு தான் அரசவை புலவராவே இருப்பாரு. அரவையில அமைச்சராகாலாம்ன்ற ஆசை இருக்காதா?. இத்தனை நாளு இந்த ஆசையை மனசுக்குள்ளயே வச்சிட்டு இருந்தவரு, இப்போ வெளிப்படையா மேலிடத்துக்கு காட்ட ஆரம்பிச்சு இருக்கிறாரு.

மேலும் படிக்க | கிசுகிசு : அண்ணனுக்கு ஜெயிக்கிற ஐடியாவே இல்ல போல - முன்னாள் தம்பிகளின் கிண்டல்

வழக்கமா பொறந்தநாள தலைநகரத்துல கொண்டாடுறவரு, இந்த முறை தன்னோட சொந்த மாவட்டமான ’இனிப்பு ஈ’ ஏரியாவுல, தன்னோட தோப்புல தடபுடலா ஏற்பாடு செஞ்சிருக்கிறாரு. அந்த விழாவுக்கு பொறுப்புல இருக்கிற சூரிய கட்சியோட பிரமுகர்கள், அனுதாபிகள், நண்பர்கள் என எல்லாரையும் அழைச்சிருக்கிறாரு. அவங்களும் கூப்பிட்ட குரலுக்கு ஓடிடோடி வந்து கவிஞர வாழ்த்தி, அன்பால நெகிழ வச்சுட்டு வந்தாங்க. ஒரே கட்சியில இருந்தாலும் ஒரு குடும்பத்துக்கு எதிராவே அரசியல் செஞ்சி பல ஆண்டுகளா தோத்துப்போய், இப்போ சூரிய கட்சியில ஐக்கியமாகி லேட்டஸ்டா நடந்த செங்கோட்டைக்கான தேர்தல்ல வெற்றி பெற்றவர் மற்றும் மூத்த அமைச்சர் ஒருவர் எல்லாம் நேர்லயே வந்து வாழ்த்திட்டு போனாங்க. அதுமட்டுமில்ல, அவர சினிமாவுக்கு சிபாரிசு பண்ண இயக்குநரும் கலந்துக்கிட்டாரு. அவங்கள எல்லாத்தையும் நானும் நேர்ல பார்த்தேன்." என்றான் குசும்பன்.

’ஏம்பா, குசும்பா நீ சொல்றதுக்கும், அந்த பொறந்தநாளு விஷேசத்துக்கும் என்னப்பா சம்பந்தம்?’ என டீ மாஸ்டர் கேட்க, இங்க இருந்து தான் அடுத்த கதையை ஆரம்பித்தான் குசும்பன். ‘ அண்ணே மேட்டரு இல்லாமலா இருக்கும். அரசவைக்கு போகணும்னு நினைக்கிற கவிஞருக்கு, போட்டியிட ஒரு ஏரியா வேணும்மில்ல. அதனால் தான் சொந்த மாவட்டத்துல இருக்கிற சொந்த தோட்டத்துலயே பொறந்த நாள் விழாவ வச்சாராம். அங்க இருந்து தனக்கு இருக்கிற செல்வாக்கை மேலிடத்துக்கு காண்பிக்கவும், அங்க நான களமிறங்க தயாருன்னு சொல்றதுக்காகவும் தானாம். ஏன்னா பொறந்த மண்ணுல ஜெயிக்க வேணும்ங்கிறது தான் அவரோ ஆசையாம். தனக்கு சொந்தமான ஏரியவுல ஜெயிக்கிறதும் ஈஸி, ஆட்களும் சுறுசுறுப்பா வேலை பார்ப்பாங்கனு கவிஞரு நினைக்கிறாராம்’ என்றான்.

‘அது சரிப்பா, அவருக்கு இருக்கிற செல்வாக்குக்கு, இதையெல்லாம் நடத்தி காட்டி தான் மேலிடத்துகிட்ட சொல்லணுமா என்ன?, அவரு நேரடியாவே முதன்மையானவரு கிட்ட பேசி தன்னோட விருப்பத்த சொல்லலாமே, அப்படி சொல்லக்கூடிய செல்வாக்கு உள்ளவரு தான் கவிஞரும். முதன்மையானவரும் கேட்க கூடியவரு தான். அப்புறம் ஏன் இந்த பொறந்த நாளு கச்சேரி எல்லாம்?’ என மாஸ்டர் கேட்க, ‘அண்ணே நீங்க சொல்றது வாஸ்தவம் தான். கவிஞருக்கு பல வருஷமாவே இந்த ஆசை இருந்துச்சு. ஆனால் அவரு மேல எழுந்த சில சர்ச்சைகள் காரணமா வெளிப்படையா எதுவும் கேட்க முடியல. அதனால் சொந்த ஊருல செல்வாக்கை காண்பிச்சு, அப்புறம் மெதுவா மேலிடத்துக்கிட்ட சொல்லலாம்னு நினைக்கிறாராம். அதனோட முதல் படி தான் இந்த விழா ஏற்பாடெல்லாம். சொந்த ஊரு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் எல்லாம் வழங்கினாரு. லட்ச ரூபாய் காசோலை எல்லாம் எடுத்து கொடுத்தாரு. 

இத்தனை நாளு அரசியல் கட்சி ஆளுங்களோடவே கூடவே இருந்தவருக்கு இந்த அரசியல் கணக்கு எல்லாம் தெரியாமலா இருக்கும். பெரியவரு கூட தினமும் பேசிக்கிட்டு, அவரு செஞ்ச அரசியல் எல்லாம் பார்த்தவரு கவிஞரு. அதனால, அவங்க என்ன எதிர்பார்ப்பாங்க அப்படிங்கிறது எல்லாம் தெரிஞ்சு வச்சிக்கிட்டு தான மூவ் பண்றாராம். என்ன தான் இருந்தாலும் அரசியல் வேற, பழக்க வழக்கம் வேற இல்லையா?. அதனால் தான் கவிஞரும் இந்த ரூட்ல இப்போ போறாரு.’ என்றான் குசும்பன். ‘ஆனால் கவிஞருக்கு இப்போவே 71 வயசு ஆயிருச்சேப்பா, கோட்டை தேர்தல் வர்றத்துக்கு இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு. கூட்டி கழிச்சி பார்த்தா, வயசு இடிக்குதே.’ என டீ மாஸ்டர் கேட்க, ’ எனக்கும் அந்த டவுட்டு இருந்துச்சுண்ணே, அதேநேரத்துல முதன்மையானவரும் கவிஞருக்கு எந்த பொறந்தநாள் வாழ்த்தும் தெரிவிக்கல. அதனால், ரெண்டு பேருக்கும் நடுவுல ஏதாவது டக்கு முக்கு இருக்கா?, இல்ல கவிஞரோட முவ் முதன்மையானவருக்கு தெரிஞ்சு தான் அமைதியா இருக்கிறாரான்னு தெரியல?. அதனால அதைப் பத்தி கொஞ்சம் விசாரிச்சுட்டு வர்றேன்’ என்று கிளம்பினான் குசும்பன். 

மேலும் படிக்க | கிசுகிசு : தூதுவிடும் தோழி, பழைய பாசத்தால் கரையும் மாஜிக்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News