கிசுகிசு : தூதுவிடும் தோழி, பழைய பாசத்தால் கரையும் மாஜிக்கள்..!

Gossip : இலை கட்சிக்குள் இப்போது மீண்டும் புகைச்சல் எழத் தொடங்கியிருக்கிறதன் பின்னணியில் முன்னாள் தோழியின் சைலண்டாக விட்டிருக்கும் பாசக்கயிறே காரணம் என்கிறது கார்டன் வட்டாரம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 11, 2024, 02:00 PM IST
  • இலை கூடாரத்துக்குள் மீண்டும் சலசலப்பு
  • மாஜிக்களுக்கு ரகசியமாக செல்லும் அழைப்புகள்
  • சேலத்துக்காரர் போடும் கண்டிஷன் இதுதான்
கிசுகிசு : தூதுவிடும் தோழி, பழைய பாசத்தால் கரையும் மாஜிக்கள்..! title=

Gossip Tamilnadu Politics Latest : டீ மாஸ்டர் ஆவி பறக்க வடையை இறக்கி வைத்த கணநேரத்தில் டீக்கடைக்கு வந்த குசும்பன், மழை ஈரத்துக்கு சூடா வடை கொடுண்ணே என கேட்க, ‘நீ கொஞ்சம் சூடான தகவலை சொல்லுப்பா’ என்றார் மாஸ்டர். அதுவந்துண்ணே என லேட்டஸ்டாக சேகரித்து வந்த கார்டன் மேட்டரை சொல்ல ஆரம்பித்தான் குசும்பன். ’அண்ணே.. இலைக்கட்சிக்குள்ள இப்போது பாசப்போராட்டம் தொடங்கியிருக்கு. முடிஞ்சது முடிந்ததாகவே இருக்கட்டும், இனியும் பிரிஞ்சு இருக்க வேண்டாம். எல்லா ஐக்கியமாகலாம்ங்கிற முடிவுக்கு மாஜிக்கள் வந்துட்டாங்க. குறிப்பாக முன்னாள் தோழியின் வட்டத்தில் இருந்து வந்தவங்கள் எல்லோரும் அந்த மைண்ட்செட்ல தான் இருங்காங்க. அடுத்து நடக்கப்போகும் தேர்தலில் ஜெயிச்சு கோட்டைக்கு போகணும்னா, எல்லோரும் ஒன்னு சேருவதுதான் நல்லது என சேலத்துக்காரர்கிட்ட அவங்களும் சொல்லியிருக்காங்க. 

மேலும் படிக்க | கிசுகிசு : முதன்மையானவரின் கடுகடுப்பு.... காக்கிகளுக்குள் நடந்த அதிரடி மாற்றம்..!

ஆனால், அவரோ பிடிகொடுக்கவே இல்லையாம். எல்லாம் சேர்ந்தா தனக்கு எதிராவே திரண்டுருவாங்கனு நினைக்கிறாராம். இப்ப நம்ம கிட்ட புடி இருக்கு, அவங்க வந்துட்டா எல்லோரும் அவங்க பக்கம் சாஞ்சிருவாங்க. அப்போ கட்சி நம்ம கையில் இருந்து அவங்க பக்கம் போய்டும் என சொல்றாராம். அவரு கூட இருக்கிற சில மாஜிக்களே எல்லாம் ஒன்னு சேரலாம்னு சொன்னபோது கூட, அவரோ பதில் இதுவா தான் இருந்துச்சாம். சேலத்துக்காரரோட பதில கேட்ட அவரு ஏரியா மாஜிக்கள், அண்ணன் சொல்றதும் வாஸ்தவம்தானேப்பா என சொல்லிவிட்டார்களாம். அப்படி எல்லாம் ஆகாதுங்கணா என சொன்ன சிலர்கிட்ட சேலத்துக்காரர் கொஞ்சம் சிவந்த முகத்தையும் காட்டியிருக்காராம். 

இப்படியே பிரிஞ்சு இருந்தா எப்படி நாம கோட்டைக்கு போறது, போதுமான சீட் ஜெய்க்க அவங்க இருக்கோணுமே என சொன்ன சில மூத்த தலைகள், சூரிய கட்சியை அடிக்கிறதுக்கு நாம எல்லா இடத்திலேயேயும் ஸ்டிராங்கா வேலை செஞ்சாகணும்ங்கிறதையும் யோசிக்கணும் என நாசுக்காக சொல்லியிருக்காங்க. அதுக்கு பதில் சொன்ன சேலத்துக்காரர் ஆதரவு தரப்பு, இப்போ இருக்கிற மூத்த தலைகள் அவங்கவுங்க இருக்கிற பகுதியில பொறுப்பு எடுத்து ஜெயிக்க வையுங்க, இது உங்களால முடியாதா? என பதில கொடுத்துருங்காங்க. இதனால், அந்த மூத்த தலைகள் அமைதியாயிட்டாங்களாம்.  இருந்தாலும் கூட்டி கழிச்சி பாக்குறப்போ இலை கூடாரம் அடுத்த சலசலப்புக்கு தயாராகிட்டு வருது என்பது மட்டும் உறுதி.

முன்னாள் தோழியும் தனக்கு நெருக்கமான அனைத்து தலைகளிடமும் ரகசியமாக பேசிட்டு தான் இருக்காங்களாம். அவங்க பேசுனதுல, பழைய மாஜிக்கள் கரைஞ்சு, அப்படியே சரண்டரும் ஆயிட்டாங்களாம். உங்க பக்கம் நாங்க வர்றோம், மத்த பக்கம் இருக்கிறவங்கள ஒன்னு சேருங்க, கடைசியா வந்து ஐக்கியமாகிக்கிறோம், நாங்க உறுதியா வருவோம் என்ற வாக்குறுதிய மட்டும் கொடுத்திருங்காங்களாம். இதனால், தனக்கு இருக்கும் சோர்ஸ்கள் மூலம் சேலத்துக்காரர் கூடாரத்தில் இருப்பவங்களையும் தொடர்பு கொள்ள முயற்சி நடக்குதாம். இந்த ஆப்ரேஷன் யாருக்கு சாதகமாக போகும் என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ் தான்" என சொல்லிவிட்டு வாயில் போட்ட வடையை சாப்பிட்டுக் கொண்டே கிளம்பினான் குசும்பன்.

மேலும் படிக்க | கிசுகிசு : சினிமா வாரிசு அரசியல் என்ட்ரி தெரிந்ததும் வலை வீசும் ஆலோசகர், இயக்குநர்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News