தமிழ்நாட்டின் மகளாக எனக்கு உரிமை இருக்கிறது - ஆளுநர் விவகாரத்தில் ஞாயம் கேட்கும் தமிழிசை

ஆளுநர்களே வேண்டாமென்று சொல்வது எந்த விதத்தில் ஞாயம் என்று தெலங்கானா மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 17, 2022, 02:19 PM IST
  • ஆளுநர்கள் விஷயத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்
  • ஆளுநரே வேண்டாமென்பது ஞாயமா என்று கேள்வி
  • முதலமைச்சரும், ஆளுநரும் தோளோடு தோள் நிற்க வேண்டுமென்று அறிவுறுத்தல்
தமிழ்நாட்டின் மகளாக எனக்கு உரிமை இருக்கிறது - ஆளுநர் விவகாரத்தில் ஞாயம் கேட்கும் தமிழிசை title=

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆளுநர்கள் வேந்தர்களாக பல்கலைக்கழகங்களை மேம்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று நான் கூறியது என் அனுபவத்தை வைத்துதான். ஆளுநர்கள் ஆக்கபூர்வமாகதான் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். தெலுங்கானா ஆளுநராக வேந்தர் பொறுப்பிலிருந்து தெலுங்கானா பல்கலைக்கழகங்களை மேம்படுத்த நான் மேற்கொண்ட பணிகள்:

1. ஆளுநராக பதவியேற்றவுடன் தெலுங்கானா மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடத்தும் போதுதான் தெரிந்தது அங்கே 12 பல்கலைக்கழகங்களில் பல ஆண்டுகளாக துணைவேந்தர் பதவிகள் காலியாக இருப்பது தெரிய வந்தது.இருந்தாலும் பொறுப்பு IAS அதிகாரிகளை அழைத்து அவர்களுடைய பணி நிர்வாகம் குறித்து ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதேபோல் இரண்டு முறை பல்கலைக்கழக ஆய்வு மாநாடு நடத்தப்பட்டது.

அவ்வப்போது தெலுங்கானா முதலமை‌ச்ச‌ர் அவர்களுக்கு பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் குறித்தும் காலியாக உள்ள துணை வேந்தர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தகவல் அனுப்பப்பட்டும், கடிதம் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டும்,நேரிலும், பொது வெளியிலும் வற்புறுத்திய பின்னர் எனது தொடர் முயற்சியால் சுமார் 2 வருடங்களுக்கு பின்பு 12 பல்கலைக்கழகங்களுக்கும் துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டனர்.

2. புதிய கல்வி கொள்கை அறிமுகம் பற்றிய விவாதங்களையும்,விழிப்புணர்வையும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஏற்படுத்தியது.

3. தெலுங்கானாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் விரிவான சுய ஆய்வறிக்கை வேண்டி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பல்கலைக்கழகங்களுக்கும் மூன்று மணி நேரம் ஒதுக்கி அனைத்து பல்கலைக்கழகங்களையும் 1 மாத காலம் ஆய்வு செய்து பல்கலைக்கழகங்களின் தேவைகள், குறைகள் மற்றும் சாதனைகளை பட்டியலிட்டு அதன் அறிக்கைகளை உயர் கல்வி துறைக்கும், முதலமைச்சருக்கும் அனுப்பி வைத்தது.

4.பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்தும் பெங்களூர் NAAC சென்டருக்கு நேரடியாக சென்று தெலுங்கானா பல்கலைக்கழகங்களின் தர ஆய்வறிக்கையை நேரடியாக பெற்று தெலுங்கானா முதலமை‌ச்ச‌ருக்கு அனுப்பி வைத்து பல்கலைக்கழகங்களை மேம்படுத்த முன்னின்றது.

Mk Stalin, RN Ravi

5. கொரோனா முதல் அலையின் போது மாணவர்களின் கற்றல் தடைபடாத வண்ணம் நாட்டிலேயே முன்னோடியாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆன்லைன் வகுப்புகளை ஆரம்பித்து வைத்தது.

6. அனைத்து பல்கலைக்கழகங்களிலும் முன்னாள் மாணவர்களின் பட்டியலை எடுத்து பல்கலைக்கழகங்கள் முன்னாள் மாணவர்களுடன் ஒரு தொடர்பு ஏற்படுத்தி பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி பணிகளில் ஈடுபடுத்தி முன்னெடுத்துச் செல்வது.

7.பல்கலைக்கழகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து பணியிடங்களை நிரப்பச்செய்தேன்.

மேலும் படிக்க | அண்ணாமலை பல்கலை நியமன முறைகேடு - விசாரிக்குமா அரசு?

8. தெலுங்கானா அரசு பல தனியார் பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க முனைப்பு காட்டியபோது அதன் தரங்களை ஆராய்ந்த பின்னரே சில தனியார் பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டது.

9. அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் ஆளுநரின் ஒப்புதல் எந்த வித அரசியல் தலையீடு இன்றி அரசாங்கம் அமைத்த தேர்வுக்குழு அங்கீகரித்த நபர்களையே துணை வேந்தர்களாக நியமித்தது அனைவராலும் வரவேற்கப்பட்டது.

10.பெண்களுக்கான கல்வி, முன்னேற்றம் அவர்களுடைய பொழுதுபோக்கு மற்றும் பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக உடல் நலம் பேணும் குறிப்பேடு பராமரிக்க பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

மாநிலத்தில் அரசியல் சாசனத்தை கண்காணிக்கும் ஆளுநர்களே வேண்டாம் என்பது எந்த விதத்தில் நியாயம்? ஆளுநர்கள் பல்கலைக்கழக பணிகளை வேந்தர்களாக எந்த வித விருப்பு, வெறுப்பின்றி முதலமை‌ச்ச‌ருக்கு தோளோடு தோள் நின்று கல்வி பணியாற்றுவதே சாலச்சிறந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | தமிழகத்தில் கலவரம்... போலீசார் துப்பாக்கி சூடு! வாகனத்திற்கு தீ வைப்பு!

முன்னதாக, ஆளுநர்கள் வரம்பு மீறுவதால் வரும் அம்புகள் என்ற தலைப்பில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News