அரசுக்கே முழு அதிகாரம்; அரசின் அதிகாரத்தில் ஆளுநர் தலையிடக் கூடாது: உச்சநீதிமன்றம்

புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை மக்களால் தேர்ந்தெடுகக்ப்பட்ட அரசுக்குதான் முழு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 12, 2019, 02:23 PM IST
அரசுக்கே முழு அதிகாரம்; அரசின் அதிகாரத்தில் ஆளுநர் தலையிடக் கூடாது: உச்சநீதிமன்றம் title=

புதுடெல்லி: மக்களால் தேர்ந்தெடுகக்ப்பட்ட அரசுக்குதான் முழு அதிகாரம் உள்ளது. அரசின் அதிகாரத்தில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலையிடக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் துணை நிலை ஆளுநராக இருக்கும் கிரண்பேடிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கூடுதல் அதிகாரம் வழங்கியது. இதனையடுத்து கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசின் அன்றாட நடவடிக்கையில் தலையிட ஆரம்பித்தார். அரசு செய்ய வேண்டிய பணிகளை, அவரே செய்தார். அரசிடம் எந்தவித ஆலோசனை செய்யாமல், அவராகவே பல நடவடிக்களை மேற்க்கொண்டார். இதனால் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் துணை நிலை ஆளுநராக இருக்கும் கிரண்பேடிக்கு இடையே மோதல் வெடித்தது.

தனது அதிகார வரம்பை மீறி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டு வருகிறார் என முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார். இதனையடுத்து மதுரைக்கிளைஉயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், அரசின் அன்றாட நடவடிக்கையில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, தலையிடுவதாகவும், அவருக்கு வழங்கப்பட்ட கூடுதல் அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. 

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தனது அதிகாரத்துக்கு உட்பட்டு தான் செயல்பட வேண்டும். அரசின் அதிகாரத்தில் தலையிடக்கூடாது எனக்கூறி கிரண் பேடிக்கு வழங்கப்பட்ட கூடுதல் அதிகாரத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கிரண்பேடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதனுடன் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. இருதரப்பி வாதங்களை கேட்ட நீதிபதிகள் விசாரணையை ஜூலை மாதம் ஒத்தி வைத்தனர்.

இந்தநிலையில், இன்று இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வந்தது. அப்பொழுது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே கூடுதல் அதிகாரம் எனவும், அரசின் அதிகாரத்தில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலையிடக்கூடாது எனக்கூறிய உச்சநீதிமன்றம் இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்தது.

Trending News