CM Stalin On Kodanad Case: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, 'கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக அரசின் மீது தவறு கிடையாது, நாங்கள் விசாரணை நடத்தியபோதே ஆட்சி மாறிவிட்டது' என்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,"கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய சையான் அதிமுக ஆட்சியில் பல உண்மைகளை வெளியே சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அவரை சொல்லவிடவில்லை. தற்போது காவல்துறை இதை விசாரித்து வருகிறது. இதுவரை 306 நபர்களிடம் விசாரணை நடத்தபட்டுள்ளது.
கொடநாடு கொலை நடந்தது, 2017ஆம் ஆண்டு. அப்போதே நடந்த சம்பவத்திற்கு உடனடியாக அரசு ஆதாரம் திரட்டவில்லை, திரட்டியிருந்தால் தற்போது விசாரணையை விரைவு செய்திருக்கலாம். ஆனால் அப்போது ஆதராம் திரட்டாமல் விட்டுள்ளனர். அது முன்னாள் முதலமைச்சரின் வீடு, ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியில் முறையாக விசாரிக்கவில்லை" என்றார்.
அப்போது குறுகிட்ட எடப்பாடி பழனிச்சாமி,"கொடநாடு பங்களா முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் இல்லை, வேறு ஒருவர் பெயரில் உள்ளது. திமுக ஏதேதோ ரூபத்தில் மிரட்ட பார்க்கிறார்கள்" என்றார்.
மேலும் படிக்க | Annamalai: நோ கமெண்ட்ஸ்... இபிஎஸ்-ஐ நோஸ் கட் செய்தாரா அண்ணாமலை?
இதை தொடர்ந்து, கொடநாடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் - எதிர்கட்சித் தலைவர் இடையே பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. அவை கீழ்வருமாறு:
முதலமைச்சர் ஸ்டாலின்: பொள்ளாட்சி வழக்கில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள், கொடநாடு சம்பவம் என்ன ஆயிற்று? தற்போது நாங்கள் தான் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
எடப்பாடி பழனிசாமி : கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்தது அதிமுக அரசுதான். அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது திமுக. மேலும், கொடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாட உள்ளோம்.
முதலமைச்சர் ஸ்டாலின்: கொடநாடு விவகாரத்தில் திமுக ஆட்சிக்கு வந்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது, அதிமுக ஆட்சியில் காலம் மெத்தனமாக இருந்தீர்கள், நாங்கள் அந்த வழக்கு குறித்து முறையாக விசாரணை நடத்தி குற்றம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்.
எடப்பாடி பழனிசாமி : கொடநாடு வழக்கு விசாரணைக்கு வந்த போது கொரோனா காலகட்டம் அதனால் முறையாக விசாரணை நடத்த முடியவில்லை.
அமைச்சர் ரகுபதி : குற்றவாளிகள் தப்ப முடியாதபடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
எ.வ.வேலு : அதிமுக ஆட்சியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள், குத்தப்பட்டார்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெட்டப்பட்டார்கள், அதை கண்டுபிடித்தார்களா?
எடப்பாடி பழனிசாமி : கொடநாடு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது அது குறித்து எப்படி பேசலாம்.
முதலமைச்சர் ஸ்டாலின்: நாங்கள் தீர்ப்பிற்குள், விசாரணைக்குள் செல்லவில்லை, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தான் கேட்கிறோம். குற்றவாளி சாயன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ளார் இந்த சம்பவம் நடந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. சம்பவம் நடந்த உடன் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தியிருந்தால் வழக்கு நிலுவையில் இருந்திருக்காது. ஜெயலலிதா வீட்டில் நடைபெற்ற சம்பவம், அவர் சாதாரண நபர் கிடையாது முதலமைச்சராக இருந்தவர். மிகுந்த கவனத்தோடு விசாரணை நடத்தி உண்மை சம்பவத்தை கண்டுபிடிப்போம்
எடப்பாடி பழனிசாமி : அந்த வீடு வேறொருவருடையது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடு கிடையாது. அது தனியாரிடம் தான் அரசு உங்களிடம் தான் இருக்கிறது விசாரணை நடத்திக் கொள்ளுங்கள்.
முதலமைச்சர் ஸ்டாலின்: அந்த அவருடையதாக இல்லை என்றாலும் அவர் இருந்த வீடு அலுவலகமாக பயன்படுத்திய வீடு. கொடநாடு விவகாரத்தில் மிகுந்த கவனத்தோடு விசாரணை நடத்தி உண்மை குற்றவாளியை விரைவில் கண்டுபிடிப்போம்.
இவ்வாறு சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ