Annamalai: நோ கமெண்ட்ஸ்... இபிஎஸ்-ஐ நோஸ் கட் செய்தாரா அண்ணாமலை?

Annamalai Comment On EPS: தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரித்தது குறித்த கேள்விக்கு, பிற கட்சியை பற்றி பேச விரும்பவில்லை என தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 20, 2023, 04:16 PM IST
  • கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் அண்ணாமலை பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக உள்ளார்.
  • அதிமுக சார்பில் பெங்களூரு புலிகேசிநகர் தொகுதியில் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.
  • ஓ. பன்னீர்செல்வமும் தனது தரப்பில் அத்தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்தார்.
Annamalai: நோ கமெண்ட்ஸ்... இபிஎஸ்-ஐ நோஸ் கட் செய்தாரா அண்ணாமலை? title=

Annamalai Comment On EPS: கர்நாடகா மாநிலம், ஓசூருக்கு அருகே மாநில எல்லையான ஆனேக்கல் நகரில் ஆனேக்கல் சட்டப்பேரவை தொகுதி பாஜக வேட்பாளர் உள்ளஹள்ளி சீனிவாசன் அவர்களின் வேட்புமனு பேரணி இன்று (ஏப். 20) நடைப்பெற்றது. 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மத்தியில் வேட்பாளருடன் பிரச்சார வாகனத்தில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பயணித்தார். 

தொடர்ந்து, பிரச்சார களத்தில் பத்திரிகையாளர்களுக்கு அண்ணாமலை பேட்டியளித்தார். அப்போது அவரிடம் அதிமுக பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர்,"பிற கட்சியை பற்றி பேச விரும்பவில்லை" என பதிலளித்தார்.

மேலும் படிக்க | பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை! அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரித்த இந்திய தேர்தல் ஆணையம்

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் தனித்தனியாக வேட்பாளர்கள் அறிவித்தது குறித்து கேட்டதற்கும்,"பிற கட்சி பற்றி பேச வேண்டாம்" என பதிலளிக்க மறுத்துவிட்டார். மேலும், பேசிய அவர் கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 130 தொகுதிகளில் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்றும் இன்னும் பிரதமர் மோடியின் பேரணி திட்டமிடப்படவில்லை என்றும் தெரிவித்தார். 

முன்னதாக, அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது அடுத்து, கர்நாடக தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதிமுக சார்பில், பெங்களூரு, புலிகேசிநகர் தொகுதியில் அக்கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவர் அன்பரசன் போட்டியிடுவார் என்றும் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார்.

இதையடுத்து, ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் அதே தொகுதியில் மற்றொரு வேட்பாளர் நிறுத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. புலகேசிநகர் தொகுதியில் ஓபிஎஸ் அணி சார்பில் நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயாக கூட்டணியில் அங்கும் வகிக்கும் அதிமுக, கர்நாடகாவில் கூட்டணியில் இல்லாமல் தனித்து களம் காணுவது கூட்டணி குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கர்நாடகவின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | அண்ணாமலை மீது அடுத்து வழக்கு தொடரப்போகும் திமுகவின் முக்கிய புள்ளி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News