முதல்வரின் பெருந்தன்மை; எத்தனை இரவுகளும் உறக்கம் தொலைக்கலாம்: வைரலாகும் எம்.பி. பதிவு

முதல்வர் மு.க.ஸ்டாலினின் பெருந்தன்மையான மனதிற்காக எத்தனை இரவுகளும் உறக்கம் தொலைக்கலாம் என்று எம்.பி., எம்.எம்.அப்துல்லா தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 12, 2022, 06:03 PM IST
  • ஓரிரவு கூட முழுமையாக உறங்க இயலவில்லை
  • முதல்வர் ஐயா நேரில் வந்திருந்தார்
  • பெருந்தன்மையான மனதிற்காக எத்தனை இரவுகளும் உறக்கம் தொலைக்கலாம்!''
முதல்வரின் பெருந்தன்மை; எத்தனை இரவுகளும் உறக்கம் தொலைக்கலாம்: வைரலாகும் எம்.பி. பதிவு  title=

முதல்வர் மு.க.ஸ்டாலினின் பெருந்தன்மையான மனதிற்காக எத்தனை இரவுகளும் உறக்கம் தொலைக்கலாம் என்று எம்.பி., எம்.எம்.அப்துல்லா தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

பிப்ரவரி 24-ம் தேதி ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீது போர் தொடுத்தது. இத்தாக்குதல் 17-வது நாளாகஓரிரவு கூட முழுமையாக உறங்க இயலவில்லை இன்று நடைபெற்று வருகிறது. இதனிடையே போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. உக்ரைன் போரால் அங்கு படிக்கும் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், அம்மாணவர்களை மீட்பதற்காகவும் தமிழக அரசு சார்பில் எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டது. திருச்சி சிவா, எம்.எம்.அப்துல்லா, கலாநிதி வீராசாமி ஆகிய எம்.பி.க்கள், எம்எல்ஏ டிஆர்பி ராஜா, 4 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய இக்குழு ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது.

பெற்றோர்கள், மாணவர்களுக்கு உதவும் நோக்கில் அவசரக் கட்டுப்பாட்டு மையமும் அமைக்கப்பட்டது. எம்.பி.க்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய மீட்புக் குழுவினர் டெல்லியில் முகாமிட்டு உக்ரைனுக்கு அருகிலுள்ள நாடுகளின் இந்தியத் தூதரகங்களைத் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினர். உக்ரைனிலிருந்து டெல்லிக்கு வரும் மாணவர்களை வரவேற்று உரிய உதவிகள் புரிந்து தமிழகத்துக்குத் தனி விமானத்தில் அனுப்பி வைத்தனர். இந்த வகையில் மொத்தம் 1,464 தமிழக மாணவர்கள் மீட்கப்பட்டனர். 

இந்நிலையில் டெல்லியில் முகாமிட்டு மாணவர்களை மீட்ட தமிழக எம்.பி.க்கள் குழுவினர் இன்று சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அக்குழுவினரை வரவேற்றார். இதுகுறித்து எம்.பி., எம்.எம்.அப்துல்லா வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு சமூக வலைத்தளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 

''உக்ரைன் போர் தொடங்கிய தினத்தில் இருந்து ஓரிரவு கூட முழுமையாக உறங்க இயலவில்லை. சிக்கித் தவித்த மாணவர்கள், அவர் தம் பெற்றோர் உறவினர் என யாரேனும் நள்ளிரவுகளிலும் அதிகாலைகளிலும் அழைத்துக் கொண்டே இருந்தார்கள். மீட்புப் பணிகளில் மத்திய அரசு செய்தது என்ன? மாநில அரசு செய்த பணிகள் என்ன? என்பது குறித்தெல்லாம் விரிவாக பிறகு எழுதுகிறேன்.
இன்று காலையில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தபோது "இன்ப அதிர்ச்சியாக" எங்களை வரவேற்க முதல்வர் ஐயா நேரில் வந்திருந்தார்!! அவரின் இந்தப் பெருந்தன்மையான மனதிற்காக எத்தனை இரவுகளும் உறக்கம் தொலைக்கலாம்!''

இவ்வாறு எம்.எம்.அப்துல்லா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

 

அவரது பதிவுக்குக் கீழே நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பெரும்பணி, பெருமித வாழ்த்துகள், சிறப்பான பணி என்று தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றனர். மாணவர்களை மீட்ட அனுபவங்களைப் புத்தமாக எழுதும்படியும் சிலர் எம்.பி.க்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் படிக்க | சாதி, மத மோதல்களுக்கு சமூக வலைதளங்களே காரணம் - மு.க.ஸ்டாலின்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News