இதுவரை திமுக தரப்பில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன

TN Assembly Election 2021: மொத்தம் 234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், அனைத்து கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவாரத்தை மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 4, 2021, 04:22 PM IST
  • இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு (Indian Union Muslim League) மூன்று இடங்கள்.
  • இரண்டு தொகுதிகளை மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
  • இரண்டு தொகுதிகளை மனிதநேய மக்கள் கட்சிக்கும் (Manithaneya Makkal Katchi) ஒதுக்கியிருந்தது.
இதுவரை திமுக தரப்பில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன title=

Chennai: இன்று தி.மு.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையிலான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் போடப்பட்டு விட்டது. ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. காங்கிரஸ் (Congress), மதிமுக (MDMK) மற்றும் இடது கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை. திமுக (DMK) தரப்பில் தொடர்ந்து அந்தந்த கட்சியின் முக்கிய நிர்வாகியிடம் பேசி வருகிறது. 

சில நாட்களுக்கு முன்பு, தி.மு.க தரப்பில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு (Indian Union Muslim League) மூன்று இடங்களையும், இரண்டு தொகுதிகளை மனிதநேய மக்கள் கட்சிக்கும் (Manithaneya Makkal Katchi) ஒதுக்கியிருந்தது. தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வசிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு (Viduthalai Chiruthaigal Katchi) ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. 

ALSO READ |  TN Assembly Elections: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது திமுக

வரவிருக்கும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் (Assembly Elections), நான்கு மாநிலங்களுக்கும் ஒரு யூனியன் பிரதேசமும் அடங்கும். இந்த மாநிலங்களில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஐந்து மாநிலங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை மே 2 அன்று நடைபெறும். 

 

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், அனைத்து கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவாரத்தை மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு (Pattali Makkal Katchi) 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ALSO READ |  TN Assembly Election இருக்கை பகிர்வு: DMK மற்றும் AIADMK முகாம்களில் என்ன நடக்கிறது?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News