கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே ஏரிக்கரை ஒன்று அமைந்துள்ளது. இன்று அப்பகுயில் உள்ள முட்புதரில் மனித எலும்பு கூடு ஒன்று கிடந்தது. அந்த எலும்புக்கூட்டில் தலை, கை எலும்புகள் துண்டாக கிடந்தன. அந்த வழியாக சென்ற ஒருவர் அதனை பார்த்தார். பார்த்தவருக்கு அதிர்ச்சி உச்சத்திற்கு ஏற உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். அந்தத் தகவலின் அடிப்படையில் ஏரிக்கரைக்கு வந்த காவல் ஆய்வாளர் முருகேசனும், க் ஆவல் துறையினரும் எலும்புக் கூடுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அந்த எலும்புக்கூட்டில் கருப்பு நிற டி-சர்ட் மற்றும் பேண்ட் அப்படியே இருந்தது. அருகில் ஷுவும் கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். டி-ஷர்ட்டில் "சேலஞ்ச் 87 கிரியேட்டிவ் டன் இஸ்பெட்டர்" என்ற வாசகமும் எழுதப்பட்டிருந்தது. இறந்த நபர் யார்? ஆணா?பெண்ணா? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவர் இறந்து பல நாட்கள் இருக்கும் என்று தெரிகிறது.
யாரோ அவரை கடத்தி வந்து கொலை செய்து இங்கு வீசியிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணையை தொடங்கியிருக்கின்றனர். கைப்பற்றப்பட்ட எலும்புக் கூடை பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும், கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப் புற பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் மாயமானவர்கள் பற்றிய விவரத்தை வைத்தும் விசாரணை நடந்துவருகிறது. இந்தச் சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | பெங்களுரில் இருந்து இறக்குமதியாகும் கஞ்சா! விசாரணையில் அம்பலமான உண்மை
மேலும் படிக்க | கனிமொழி வீட்டுக்குள் அத்துமீறி புகுந்த மர்ம நபர்... போலீசார் தீவிர விசாரணை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ