திருவிழாவில் நீதிமன்றம்: ஆங்கிலேயர் காலத்திலிருந்து தொடரும் ஐதீகம்

புதுப்பட்டியில் பிரசித்தி பெற்ற துலுக்க சூடாமணி அம்மன் கோவிலில் ஒரு வினோத பழக்கம் ஆங்கிலேயர் காலம் முதல் தொடர்ந்து வருகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 16, 2022, 05:11 PM IST
  • ஆங்கிலேயர் காலத்திலிருந்து தொடரும் பழக்கம்.
  • திருவிழாவில் நீதிமன்றம்.
  • பொங்கல் வைத்த கையோடு புகட்டப்படும் பாடம்.
திருவிழாவில் நீதிமன்றம்: ஆங்கிலேயர் காலத்திலிருந்து தொடரும் ஐதீகம் title=

ராசிபுரம் அருகே புதுப்பட்டியில் பிரசித்தி பெற்ற துலுக்க சூடாமணி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் ஒவ்வொரு சமூகத்தின் சார்பிலும் சாமி ஊர்வலம் நடந்தது. 

பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற உருளுதண்டம் போட்டனர்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலையில் தேரோட்டம் நடந்தது. அம்மன் உற்சவர் சிலை தேரில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டது. பூஜைகள் செய்யப்பட்டு மேளதாளத்துடன் தேரோட்டம் தொடங்கியது.  தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். 

காலையில் தேரடி நிலையத்தில் இருந்து புறப்பட்ட தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாலையில் கோவிலை வந்தடைந்தது. தேரோட்டத்தில் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஈரோடு உள்பட பல மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி நகைச்சுவை மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற நீண்ட அலகுகுத்தி ஊர்வலமாக வந்தனர். 

மேலும் படிக்க | தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்; எதிர்சேவையில் மக்கள் பரவசம் 

ஆங்கிலேயர் காலத்திலிருந்து இந்த கோவில் திருவிழாவின்போது சிறிய குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்காக முகாம் நீதிமன்றம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டும் முகாம் நீதிமன்றம் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரெஹனா பேகம் தலைமையில் நடந்தது. 

திருவிழாவில் நடைபெறும்  குற்றங்களை  விசாரித்து அன்றே தீர்ப்பு வழங்கும் நோக்கத்திற்காகவும்  திருவிழாவின் போது ராசிபுரத்தில் இயங்கி வரும் நீதிமன்றமானது 2 நாட்கள் புதுப்பட்டி துவக்கப்பள்ளியில்  நடைபெறுவது வழக்கம். 

இதனடிப்படையில்  இன்று நடைபெற்ற  சிறப்பு  நீதிமன்றத்திலும் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. முகாமில் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது, தகராறு உள்ளிட்ட விவகாரங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திருவிழா காலங்களில் இந்த பகுதியில் செயல்படும் நீதிமன்றதில் உடனடியாக விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது. இந்த வருட திருவிழாவில் 70 வழக்குகளை விசாரித்து சுமார் ரூ.45 ஆயிரத்தை நீதிபதி ரெஹனா பேகம் அபராதமாக விதித்தார்.

மேலும் படிக்க | திருட்டு பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு - சினிமாவை விஞ்சிய நண்பனின் துரோகம்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Trending News