பரபரப்பான சூழ்நிலையில் செய்தியாளர்களை சந்திக்கும் தீபா!!

Last Updated : Feb 7, 2017, 01:44 PM IST
பரபரப்பான சூழ்நிலையில் செய்தியாளர்களை சந்திக்கும் தீபா!! title=

ஜெயலலிதா மரணத்தில் பல சந்தேகங்கள் நிறைந்த மர்மங்கள் இருப்பதாக அதிமுக மூத்த தலைவர் பிஹெச் பாண்டியன் கூறியிருந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் இன்று செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து தமிழகத்தில் ஏராளமான அதிர்ச்சி நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அவர் மறைந்த சில மணி நேரத்திற்குள் ஓ.பன்னீர்செல்வம் முதல் அமைச்சர் பதவி ஏற்றார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலர் பதவியை சசிகலா கைப்பற்றினார். தற்போது தமிழக முதல்வர் பதவியும் தான் ஏற்கா இருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

இச்சம்பவங்களால் தமிழக கொந்தளிப்புடன் இருக்கின்றனர். இந்த நிலையில் சென்னையில் அதிமுக மூத்த தலைவர் பிஹெச் பாண்டியன், அவரது மகன் மனோஜ் பாண்டியன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். அப்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா மீது அதிர்ச்சிக்குரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். 

தற்போது அதிமுக தொண்டர்களின் தேர்வாக இருக்கும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் செய்தியாளர்களை சந்திக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தரப்பில் இருந்து என்ன சொல்ல போகிறார் என பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Trending News