ஜெயலலிதா நினைவு நாள் - இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா அஞ்சலி... என்ன நடக்கப்போகிறது?

ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி மெரினாவில் இருக்கும் அவரது நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா அஞ்சலி செலுத்துகிறார்கள்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 5, 2022, 07:53 AM IST
  • ஜெயலலிதாவின் ஆறாவது ஆண்டு நினைவு தினம்
  • இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா அஞ்சலி செலுத்துகிறார்கள்
  • மெரினாவில் பாதுகாப்பு தீவிரம்
ஜெயலலிதா நினைவு நாள் - இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா அஞ்சலி... என்ன நடக்கப்போகிறது? title=

திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து எம்ஜிஆரை குருவாக ஏற்றுக்கொண்டு அரசியலுக்குள் நுழைந்தவர் ஜெயலலிதா. ஆரம்பத்தில் அதிமுகவின் சீனியர்களால் ஓரங்கட்டப்பட்டவர், எம்ஜிஆர் இறப்பின் போது கீழே தள்ளவிடப்பட்டவர் காலப்போக்கில் தனக்கு கீழே அந்த சீனியர்களை அமரவைத்தது வரலாறு. எம்ஜிஆர் இறப்புக்கு பிறகு லாவகமாக ஜெயலலிதா கட்சியை கைப்பற்றியதை கண்டு பலரும் வாயடைத்தே போனார்கள். அதன் பிறகு 1991ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி உயிரிழக்க திமுக ஆட்சி கலைக்கப்பட தமிழ்நாட்டின் முதலமைச்சரானார செல்வி ஜெ.ஜெயலலிதா. முதல்முறையாக 1991-1996ஆம் ஆண்டு தமிழ்நாட்டை ஆட்சி செய்த ஜெயலலிதா அந்த 5 ஆண்டுகளில் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்தார். குறிப்பாக, அவர் சிறை செல்ல காரணமாக இருந்த சொத்துக்குவிப்பு வழக்கு அந்த ஆட்சியை வைத்துதான் போடப்பட்டது. மேலும், சிறுதாவூர் பங்களா, கொடநாடு பங்களா என பல சர்ச்சைகள் சுற்றின.

தொடர்ந்து, ஆட்சியிலிருந்து இறங்கிய அவர் 2001ஆம் ஆண்டு மீண்டும் அரியணை ஏறினார். அந்த ஆட்சிக்காலத்திலும் அரசாங்க ஊழியர்கள் விவகாரத்தில் சர்ச்சையை சம்பாதித்தார். இருப்பினும் ஜெயலலிதா மீது தொண்டர்களுக்கோ, மக்களுக்கோ நம்பிக்கை குறையவில்லை. அடுத்ததாக ஆட்சி செய்த திமுக 2006லிருந்து 2011ஆம் ஆண்டுவரை ஈழ தமிழர் விவகாரம், நில அபகரிப்பு, 2ஜி என சர்ச்சையில் சிக்க மீண்டும் ஆட்சிக்கு ஏறினார் ஜெயலலிதா.

2011ஆம் ஆண்டு தேர்தல், 2016ஆம் ஆண்டு தேர்தல் என இரண்டு தேர்தலில் வெற்றி பெற்றது, மோடியா லேடியா என சூளுரைத்து என்று ஃபுல் ஃபார்மில் இருந்தார் ஜெ. இப்படிப்பட்ட சூழலில் ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. அவரது மறைவுக்கு அதிமுக பல துண்டுகளாக சிதறிக்கிடக்கிறது.

Jayalalithaa

இப்படிப்பட்ட சூழலில் ஜெயலலிதாவின் ஆறாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தான்தான் அதிமுகவின் அடையாளம் என கூறிக்கொள்ளும் இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோர் ஜெ நினைவிடத்தில் வெவ்வேறு நேரங்களில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

அதன்படி, எடப்பாடி பழனிசாமி காலை 9.30 மணிக்கும், ஓ.பன்னீர்செல்வம், 10.30 மணிக்கும், சசிகலா 11 மணிக்கும், டிடிவி தினகரன் 11.30 மணிக்கும் அஞ்சலி செலுத்துகின்றனர். இதனால் மெரினாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதிமுகவை தங்கள் கட்டுக்குள் வைத்துக்கொள்ள நினைக்கும் மூன்றூ பேரு சிறிது சிறிது நேர இடைவெளியில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு வரவிருக்கிறார்கள். இதனால் என்ன நடக்கப்போகிறது என ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அதேசமயம் எது நடந்தாலும் அதிமுகவை அழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென்பதே அவர்களின் உண்மையான எதிர்பார்ப்பாக இருக்கிறது.

மேலும் படிக்க | 4 நாள்களுக்கு மழைதான் - வானிலை ஆய்வு மையம் கொடுத்திருக்கும் அலெர்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News